விடைபெற்ற தமிழிசை @ புதுச்சேரி ராஜ்நிவாஸ் - போட்டோ ஸ்டோரி

Tamilisai Soundararajan also resigned as Puducherry lieutenant governor

Published on
தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்புக்கும் கூடுதலாக நியமிக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதையொட்டி இப்பதவிகளை ராஜிநாமா செய்தார். அதை குடியரசுத்தலைவர் ஏற்றார்.

இந்நிலையில் புதுச்சேரி ராஜ்நிவாஸுக்கு இன்று மதியம் வந்தார். அவரை முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சந்தித்தனர்.
முதல்வர் ரங்கசாமி ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு, புதுச்சேரிக்கு பொறுப்பு துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் புதுச்சேரி ராஜ்நிவாஸுக்கு இன்று மதியம் வந்தார். அவரை முதல்வர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சந்தித்தனர். முதல்வர் ரங்கசாமி ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு, புதுச்சேரிக்கு பொறுப்பு துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை தொடர்பு கொண்டு பேசியதாகத் தெரிவித்தார்.
தெலங்கானா சென்று விட்டு புதுச்சேரி வருவதாக குறிப்பிட்டதாக பேசிக்கொண்டனர். பின்னர் சிறிது நேரம் தமிழிசையிடம் பேசி விட்டு ரங்கசாமி புறப்பட்டார். அவர் கூறுகையில்,

தேசிய ஜனநாயக க்கூட்டணியில் பாமக இணைந்துள்ளது மகிழ்ச்சி. எங்களது கூட்டணியின் வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளது. புதுச்சேரி பாஜக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்

அதேபோல் உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும், தமிழிசையை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.அதைத்தொடர்ந்து மாலை ராஜ்நிவாஸிலிருந்து தமிழிசை புறப்பட்டார்.

தமிழிசைக்கு காவல் துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை தரப்பட்டது. அதைத் தொடர்ந்து தலைமைச் செயலர் சரத் சவுகான், டிஜிபி  ஸ்ரீனிவாஸ், அரசு செயலர்கள் என பலரும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர்.

புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட போது மணக்குளவிநாயகர் கோயில் சென்று சாமி கும்பிட்டு விட்டு தமிழிசை சென்னைக்கு புறப்பட்டு சென்றார். | தகவல் ஞானபிரகாஷ் | படங்கள்: எம்.சாம்ராஜ்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in