பிறந்தநாளில் தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த் - போட்டோ ஸ்டோரி

Published on
தனது 71-வது பிறந்தநாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் இன்று கட்சித் தொண்டர்களை சந்தித்தார். | புகைப்படங்கள்: பி.வேளாங்கண்ணி ராஜ்

உடல் நலக்குறைவு காரணமாக இருக்கையில் அமர்ந்தபடி, தொண்டர்களைப் பார்த்து உற்சாகமாக கைகளை அசைத்து தனது மகிழ்ச்சியை விஜயகாந்த் வெளிப்படுத்தினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

தனது மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜயகாந்த் வெளியிட்டார்.

விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த தொண்டர்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் பேசும்ப்போது,

மேலும்,  “தயவுசெய்து ஊடகங்கள், யூடியூப் சேனல்கள் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் தவறாக எழுதாதீர்கள். காரணம், கடைக்கோடியில் இருக்கும் தேமுதிக தொண்டர்கள் கஷ்டப்படுகின்றனர். எனவே, விஜயகாந்த் நன்றாக இருக்கிறார்” என்றார் பிரேமலதா.

“கட்சித் தொண்டர்களே, அவரது உடல்நிலை குறித்து ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னாலும், யாரும் எதற்கும் கவலைப்படாதீர்கள். விஜயகாந்த் நம்முடன் நூறாண்டு காலம் நிச்சயம் இருப்பார்

விஜயகாந்தின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in