‘மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும், அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்து ஆடுவதைக் கண்டித்தும், இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் இருந்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினை கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று (ஜூலை 20) வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்’ என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.