பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்ட கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களாக, அதானி விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், ராகுல் காந்தி தனது லண்டன் பேச்சுக்காக நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளுங்கட்சியினரும் அமளியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் தொடர்ந்து மூன்றாவது நாளாக, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளின் செயல்பாடும் பாதிக்கப்பட்டுள்ளது.