தமிழக அலங்கார ஊர்தி: ஆங்கிலேயர் காலத்தில் ‘கிங்ஸ் வே’என்று பெயர்சூட்டப்பட்டு, ராஜபாதை என அறியப்பட்டு வந்த 3 கி.மீ பாதை அண்மையில் புனரமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதன் பெயர் ‘கடமை பாதை ’என மாற்றப்பட்டது. காலனியாதிக்க சுவடுகளின் அடையாளத்தை மாற்றும் வகையில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பெயர்மாற்றம் செய்யப்பட்ட ‘கடமை பாதையில் முதல் முறையாக குடியரசு தின விழா பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளும் அணிவகுத்தன. | படங்கள்: கமல் நரங், ஆர்.வி.மூர்த்தி