உத்தரப் பிரசேத்தின் வாரணாசியில் நடைபெறும் ஒரு மாத நிகழ்ச்சியான ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்வை சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வு டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. காசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான பண்டைய தொடர்புகளை புதுப்பித்துக் கொள்ளும் விதமாகவும், இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.