பாதுகாப்பு தளவாட கண்காட்சி 2022 - சிறப்பு புகைப்படத் தொகுப்பு

Published on
குஜராத் மாநிலம் காந்தி நகரில் வரும் நேற்று (அக்.18) தொடங்கி 22-ம் தேதி வரை ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் பாதுகாப்பு கண்காட்சியின் 12-வது பதிப்பு நடைபெற்று வருகிறது. | படங்கள்: விஜய் சொனேஜி

பாதுகாப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள இந்த பிரம்மாண்டமான பாதுகாப்பு கண்காட்சி நிலம், ஆகாயம், கடல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது.

மேக் இன் இந்தியா, தற்சார்பு இந்தியா கொள்கை முன்முயற்சிகளுடன் நாட்டில் அபரிமிதமான வாய்ப்பு உள்ளதாக அரசு கருதுகிறது. பல நட்பு நாடுகளில் உள்ள பாதுகாப்பு தீர்வுகளுக்கு இது உதவும்.

காந்திநகர் மகாத்மா மந்திர் மற்றும் கண்காட்சி மையத்தில் காணொலி வடிவில் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதில் உரையாற்றுபவர்கள் மற்றும் பார்வையாளர்கள் காணொலி மூலம் பங்கேற்கலாம்.  உலகளவில் இது ஒளிபரப்பப்படும்.

முன்னணி தொழில் சங்கங்கள், சிந்தனையாளர்கள், இந்திய பாதுகாப்பு, பொதுத்துறை நிறுவனங்கள், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், மாநில அரசு உள்ளிட்டவை இந்த கருத்தரங்குகளை நடத்தும்.

ஏற்றுமதி, பாதுகாப்பு ஸ்டார்ட-அப்களுக்கு  நிதி வழங்கல் மற்றும் முதலீடுசெய்தல், எம்எஸ்எம்இக்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தற்சார்பு இந்தியா உள்ளிட்டவை கருத்தரங்கிற்கான கருப்பொருள்களை வழங்கும்.

இந்த கருத்தரங்குகளில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான முன்னணி பாதுகாப்பு மற்றும் வான்வெளித்துறை நிபுணர்கள் இதில் உரைநிகழ்த்துவார்கள்.  பாதுகாப்பு கண்காட்சி 2022-ன் வலைதளத்தின் கருத்தரங்குகள் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in