ஆனால், கரோனா பரவல் காரணமாக பல மாதங்கள் கட்டுமானப் பணிகள் தடைபட்டதால், குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து, கூடுதலான பணியாளர்கள் மூலம் கடந்த சில மாதங்களாக இரவு, பகலாக புதிய முனைய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது, கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதம் உள்ள தூய்மைப் பணிகள் ஓரிரு நாட்களில் முடிவடைந்து விடும் என கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.