வெள்ளத்தில் ‘புதிய’ இயல்பு வாழ்க்கைக்குப் பழகும் டெல்லிவாசிகள் - போட்டோ ஸ்டோரி

Published on
வட இந்தியாவில் ஐந்து மாநிலங்கள் இயற்கையின் பெரும் சீற்றத்தை சந்தித்து வருகின்றன. அவை: இமாச்சல பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், டெல்லி.

இந்தப் பட்டியலில்  நான்கு மாநிலங்களையும் பின்னுக்குத் தள்ளி விட்டு, கடந்த மூன்று நாட்களாக ஊடக அளவிலும்,  அரசியல் தளத்திலும் பெரும் பேசு பொருளாகியிருக்கிறது டெல்லி.

டெல்லி பேசுபொருள் ஆக காரணம் இல்லாமல் இல்லை. மற்ற மாநிலங்களில் மழையும், மழை வெள்ளமும் அச்சுறுத்திக்கொண்டிருக்க, மூன்று நாட்களாக எந்த மழையும் பெய்யாமல் வெள்ளத்தில் மிதந்து தத்தளிக்கிறது தேசிய தலைநகரம்.

யமுனை நதிக்கரையில் இருக்கும் மாநிலங்களில் ஒன்றான டெல்லியில் யமுனை நதியின் நீர் மட்டம் திடீரென உயரத் தொடங்கி நகருக்குள் நுழையத்தொடங்கியது.

புதன்கிழமையில் இருந்து உயரத்தொடங்கிய யமுனையின் நீர்மட்டம் முதலில் தாழ்வான பகுதிகளில் புகுந்தது. நிலைமையின்  தீவிரத்தை உணர்ந்த டெல்லி அரசு முதலில் மத்திய அரசின் உதவியை கோரியது. அத்துடன் டெல்லிக்குள் கனரக வாகனங்கள் நுழையத் தடை விதித்தது.

வியாழக்கிழமை வரலாறு காணாத அளவுக்கு யமுனையின் நீர்மட்டம் உயர, வெள்ளநீர் நகரின் மையப்பகுதி வரை வரத்தொடங்கி டெல்லியை ஸ்தம்பிக்க வைத்தது. இதனால் டெல்லியில் பள்ளி கல்லூரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

வியாழன் இரவு வெள்ளநீரின் வரத்து மிகவும் அதிமாக, ஐடிஓ பகுதியில் வெள்ளத்தடுப்பு அமைப்பு செயலிழக்க நிலைமை மேலும் மோசமடைந்தது. இத்துடன் மூன்று நீர்சுத்திகரிப்பு நிலையங்கள் நீரில் மூழ்கியதால் நகரில் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.

டெல்லியின் அரசியலில் நிலைகொண்டிருக்கும் ஆம் ஆத்மி - பாஜக பனிப்போர் யமுனை வெள்ளம் வரை எதிரொலித்தது.

டெல்லியின் எதிர்பாரத வெள்ள பாதிப்பிற்கு  ஹரியாணாவின் பாஜக அரசை குறை சொல்லிய டெல்லி  ஆம் ஆத்மி அரசு, உத்தரப் பிரதேசம் வறண்டு இருக்கையில் ஹரியாணாவின் பாஜக அரசு வேண்டும் என்றே யமுனை வழியாக ஹத்னிகுண்ட் தடுப்பணையின் நீரை மொத்தமாக வெளியேற்றி உள்ளது என்று குற்றம் சாட்டி வெள்ளிக்கிழமை வீடியோ வெளியிட்டிருந்தது.

டெல்லி அரசின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானது என்றுபதிலளித்திருந்த ஹரியாணா அரசின் செய்தி தொடர்பு துறை,  “ஹத்னிகுண்ட் தடுப்பணையில் 1 லட்சம் கனஅடிக்கு அதிகமாக தண்ணீர் இருந்தால் அவை யமுனையின் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்களின் வழியாக (டெல்லியைத் தவிர பிற வழிகள்) வெளியேற்ற முடியாது. டெல்லி யமுனை ஆற்றின் வழியாகதான் வெளியேற்ற வேண்டும் என்று மத்திய நீர் ஆணையத்தின் வழிகாட்டுதல் உள்ளது. இதில் சர்ச்சைக்குரிய விஷயம் ஒன்றும் இல்லை. இந்த விவாகரத்தில் தேவையில்லாத முரண்கள் உருவாக்கப்படுகின்றன

வியாழக்கிழமை இரவு உயரத் தொடங்கிய வெள்ளநீர் பல்வேறு மனித, இயந்திர  கூட்டு முயற்சிகளுக்கு பின்னர்  வெள்ளிக்கிழமை வடியத்தொடங்கியது. இருந்தும் நகரின் பல பகுதிகள் வெள்ள நீர்சூழ்ந்திருக்கிறது.

வெள்ளம், அதன் அரசியல் லாப நஷ்டங்கள் என கட்சிகளின் கணக்குகள் ஒருபுறம் இருந்தாலும், அழையா விருந்தாளியாய் வந்த யமுனை வெள்ளத்தால் முதலில் இயல்பு வாழ்க்கையைத் தொலைத்த டெல்லிவாசிகள், இப்போது வெள்ளத்தினைக் கொண்டாடத் தொடங்கி உள்ளனர்.

சாலைகளில் இடுப்பு அளவிற்கு  தண்ணீர் தேங்கி இருந்தால் என்ன, நடக்கத் தானே முடியாது... குளிக்கலாமே என்று புதுத் தண்ணீரில் உற்சாக குளியல் போடுவது, முட்டி அளவு தண்ணீரில் நின்று கோயிலில் பிராத்தனைகள் செய்வது, ஓடும் வெள்ளத்திற்கு முன்நின்று செல்ஃபி எடுப்பது என இருப்பதை இயல்பாக்கி கொண்டுள்ளனர்.

வெள்ளம் உயரத்தொடங்கும் போது,
வெள்ளம் உயரத்தொடங்கும் போது,
இப்போது,
இப்போது,

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in