யமுனை வெள்ளத்தால் டெல்லியில் மிதக்கும் திபெத்தியர் சந்தை - போட்டோ ஸ்டோரி

Published on
யமுனை ஆற்றில் வரலாறு காணாத அளவில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லியில் உள்ள திபெத்தியர் சந்தையில் வெள்ளம் சூழ்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய உச்சத்தில் யமுனையில் வெள்ளம் பாய்வதால் தாழ்வான பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

வீடுகள், சந்தைகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. யமுனை ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பலர் தங்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர். உடைமைகளுடன் அவர்கள் காத்திருக்கும் காட்சிகள் செய்திகளில் வெளியாகியுள்ளன.

யமுனை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட, நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை ஒரு காரணம். அதேபோல் தொடர் கனமழையால் மண் நீரை உள்வாங்கிக் கொள்ளும் உச்சபட்ச எல்லையைக் கடந்துவிட்டதும் காரணம்.

ஹரியாணாவில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரும் தடுப்பணைகளைக் கடந்து யமுனை ஆற்றில் கலப்பதும் இன்னொரு காரணம் என்று மத்திய நீர் வள ஆணைய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

டெல்லி போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையக யமுனை ஆற்றங்கரையோரத்தில் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். | படங்கள்: சுஷில் குமார் வர்மா

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in