கேரளாவின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் ஆரஞ்சு அலர்ட்டும், ஒரு சில பகுதிகளில் ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மட்டும் 11 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களாகத் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக பல்வேறு ஆறுகளும் கரைபுரண்டோடுகின்றன.