அதேபோல், கரோனா மேலாண்மை பயிற்சி பெற்ற பொதுசுகாதார ஊழியர்கள், வென்டிலேட்டர் மேலாண்மையில் பயிற்சி பெற்ற ஊழியர்கள், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் மையங்களின் எண்ணிக்கைகளிலும் கவனம் செலுத்தப்படும். இதுகுறித்து சுகாதாரச் செயலாளர் ராஜேஷ் பூசன், செவ்வாய்க்கிழமை பயிற்சி ஒத்திகை நடத்தப்பட வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் கடந்த வாரத்தில் கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.