இரண்டு நாள் பொது வேலை நிறுத்தத்தையொட்டி கோவை சுங்கம் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள் | படம்: மனோகரன்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டு நாட்கள் நாடுதழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து, மத்திய அரசை கண்டித்து வேலூர் அண்ணா சாலையில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர். | படம்: வி.எம்.மணிநாதன்
பொது வேலைநிறுத்தம் காரணமாக, வேலூர் கொணவட்டம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துகள். | படம்: வி.எம்.மணிநாதன்
நாடு தழுவிய அளவிலான வேலைநிறுத்தப்போராட்டத்தில் கலந்துகொண்ட போக்குவரத்து தொழிற்சங்கங்களால் குறைந்த அளவிலாகவே அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. மதுரை உள்ளிட்ட தொலைதூர பயண பேருந்துகளுக்காக நெடுநேரம் காத்திருந்த பயணிகள்.
நாடு தழுவிய அளவில் நடைபெற்ற பொது வேலைநிறுத்தப் போராட்டத்தினால் வங்கிகள் முழுவதும் இன்று அடைக்கப்பட்டுள்ளன. பாளையங்கோட்டை இந்தியன் வங்கி மூட்டப்பட்டிருந்தததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். | படம்: அருண் எம்.மு