பேசும் படங்கள்... (29.01.2021)

பேசும் படங்கள்... (29.01.2021)
Published on
சென்னை -  தலைமைச் செயலகத்தில்  மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி இன்று (29.1.2021) நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வில்... முதல்வர் பழனிசாமி,  துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள்,  தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
 படங்கள்:  ம.பிரபு
சென்னை - தலைமைச் செயலகத்தில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி இன்று (29.1.2021) நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வில்... முதல்வர் பழனிசாமி, துணை முதலவர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் தலைமைச் செயலக ஊழியர்கள் கலந்து கொண்டனர். படங்கள்: ம.பிரபு
தைப்பூச திருவிழாவையொட்டி வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நேற்று (28.1.2021) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயிலின் சார்பாக  மரியாதை அளித்து பிரசாதம் வழங்கப்பட்டது. 
படங்கள்: எம்.முத்துகணேஷ்
தைப்பூச திருவிழாவையொட்டி வல்லக்கோட்டை முருகன் கோயிலில் நேற்று (28.1.2021) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயிலின் சார்பாக மரியாதை அளித்து பிரசாதம் வழங்கப்பட்டது. படங்கள்: எம்.முத்துகணேஷ்
சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில்...  மெரினா கடற்கரை  காமராஜர் சாலையில் சென்னை மாநகரப் பெருமையை விளக்கும் வகையில்  ’நம்ம சென்னை’ எனும் அடையாள சிற்பத்தை  முதலவர் பழனிசாமி நேற்று (28.1.2021) திறந்து வைத்தார்.  உடன் -  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ். இதையடுத்து கடற்கரையில்  இ-மிதிவண்டி  திட்டத்தையும் முதல்வர் நேற்று  தொடங்கி வைத்தார்.
 படங்கள்:  ம.பிரபு
சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில்... மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் சென்னை மாநகரப் பெருமையை விளக்கும் வகையில் ’நம்ம சென்னை’ எனும் அடையாள சிற்பத்தை முதலவர் பழனிசாமி நேற்று (28.1.2021) திறந்து வைத்தார். உடன் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ். இதையடுத்து கடற்கரையில் இ-மிதிவண்டி திட்டத்தையும் முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார். படங்கள்: ம.பிரபு
சென்னை - மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ் நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில்... முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  உருவச் சிலையை  நேற்று (28.1.2021) முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதையடுத்து அங்கு  நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாணவிகள் முதல்வருடன்  செல்ஃபி படம் எடுக்க ஆர்வத்துடன் முன்வர... முகம் சுளிக்காமல் அவர்களுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
 படங்கள்: ம.பிரபு
சென்னை - மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ் நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில்... முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச் சிலையை நேற்று (28.1.2021) முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதையடுத்து அங்கு நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாணவிகள் முதல்வருடன் செல்ஃபி படம் எடுக்க ஆர்வத்துடன் முன்வர... முகம் சுளிக்காமல் அவர்களுடன் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். படங்கள்: ம.பிரபு
சென்னை - மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்  உருவச்சிலையை  நேற்று (28.1.2021) திறந்து வைத்தார். உடன் -  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் .மற்றும் அமைச்சர்கள். படங்கள்: ம.பிரபு
சென்னை - மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவச்சிலையை நேற்று (28.1.2021) திறந்து வைத்தார். உடன் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் .மற்றும் அமைச்சர்கள். படங்கள்: ம.பிரபு
விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களைக்  கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும்... டெல்லியில் பேராாட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்...  திருச்சி - பாலக்கரையில்  மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் நேற்று  (28.1.2021) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
படம்: ஜி.ஞானவேல்முருகன்
விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களைக் கொண்டுவர முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும்... டெல்லியில் பேராாட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்... திருச்சி - பாலக்கரையில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் நேற்று (28.1.2021) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஜி.ஞானவேல்முருகன்
தைபூசத்தையொட்டி  திருச்சி - வயலூர் முருகன் கோயிலில் நேற்று (28,1,2021) சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள். 
படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
தைபூசத்தையொட்டி திருச்சி - வயலூர் முருகன் கோயிலில் நேற்று (28,1,2021) சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த... சென்னை -  போயஸ் கார்டன் ’வேதா இல்லம்’ வீடு ஜெயலலிதாவின்  நினைவு  இல்லமாக நேற்று (28.1.2021) முதல் செயல்பட தொடங்கியது. 
படம்:  க.ஸ்ரீபரத்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த... சென்னை - போயஸ் கார்டன் ’வேதா இல்லம்’ வீடு ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக நேற்று (28.1.2021) முதல் செயல்பட தொடங்கியது. படம்: க.ஸ்ரீபரத்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த... சென்னை -  போயஸ் கார்டன் ’வேதா இல்லம்’ வீடு ஜெயலலிதாவின்  நினைவு  இல்லமாக நேற்று (28.1.2021)முதல் செயல்பட தொடங்கியது. நினைவு இல்லத்தை  முதல்வர் பழனிசாமி ரிப்பன் வெட்டி  தொடங்கி வைக்கும் முன்பு, ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
படம் : க.ஸ்ரீபரத்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த... சென்னை - போயஸ் கார்டன் ’வேதா இல்லம்’ வீடு ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக நேற்று (28.1.2021)முதல் செயல்பட தொடங்கியது. நினைவு இல்லத்தை முதல்வர் பழனிசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கும் முன்பு, ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். படம் : க.ஸ்ரீபரத்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த... சென்னை -  போயஸ் கார்டன் ’வேதா இல்லம்’ வீடு ஜெயலலிதாவின்  நினைவு  இல்லமாக நேற்று (28.1.2021)முதல் செயல்பட தொடங்கியது. இந்நிகழ்சியில் -   தலமைச் செயலர் சண்முகம் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
படம் : க.ஸ்ரீபரத்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த... சென்னை - போயஸ் கார்டன் ’வேதா இல்லம்’ வீடு ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக நேற்று (28.1.2021)முதல் செயல்பட தொடங்கியது. இந்நிகழ்சியில் - தலமைச் செயலர் சண்முகம் ஜெயலலிதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். படம் : க.ஸ்ரீபரத்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த... சென்னை -  போயஸ் கார்டன் ’வேதா இல்லம்’ வீடு ஜெயலலிதாவின்  நினைவு  இல்லமாக நேற்று (28.1.2021)முதல் செயல்பட தொடங்கியது. இந்நிகழ்சியில்  நினைவு இல்ல வாயிலில் வைக்கப்பட்டிருந்த சிலை திறப்பு விழா கல்வெட்டையும்  முதல்வர் திறந்து வைத்தார். 
படம் : க.ஸ்ரீபரத்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த... சென்னை - போயஸ் கார்டன் ’வேதா இல்லம்’ வீடு ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக நேற்று (28.1.2021)முதல் செயல்பட தொடங்கியது. இந்நிகழ்சியில் நினைவு இல்ல வாயிலில் வைக்கப்பட்டிருந்த சிலை திறப்பு விழா கல்வெட்டையும் முதல்வர் திறந்து வைத்தார். படம் : க.ஸ்ரீபரத்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த... சென்னை -  போயஸ் கார்டன் ’வேதா இல்லம்’ வீடு ஜெயலலிதாவின்  நினைவு  இல்லமாக நேற்று (28.1.2021)முதல் செயல்பட தொடங்கியது.   திறப்பு விழாவைக் காண போயஸ் கார்டனில் திரண்டிருந்த  அதிமுகவினர் மற்றும்  பொதுமக்கள் 
படம் : க.ஸ்ரீபரத்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த... சென்னை - போயஸ் கார்டன் ’வேதா இல்லம்’ வீடு ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக நேற்று (28.1.2021)முதல் செயல்பட தொடங்கியது. திறப்பு விழாவைக் காண போயஸ் கார்டனில் திரண்டிருந்த அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் படம் : க.ஸ்ரீபரத்
கல்விக் கூடங்களிலும் வேலைவாய்ப்பிலும் வன்னியர் சமூகக்கு 20 சதவீத  இட ஓதுக்கீடு வழங்க வலியுறுத்தி... சென்னை - ஆட்சியர் அலுவலகம் அருகில் பாமகவினர் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில்  இன்று (29.1.2021) ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.
 படம்: க.ஸ்ரீபரத்
கல்விக் கூடங்களிலும் வேலைவாய்ப்பிலும் வன்னியர் சமூகக்கு 20 சதவீத இட ஓதுக்கீடு வழங்க வலியுறுத்தி... சென்னை - ஆட்சியர் அலுவலகம் அருகில் பாமகவினர் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் இன்று (29.1.2021) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: க.ஸ்ரீபரத்
தேர்வு செய்யப்பட்ட  10 ஆயிரம் கேங்மேன் பணியாளர்களுக்கு உடனடியாக பணி ஆணையை வழங்க வலியுறுத்தி...  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுவினர்..  சென்னை  - ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் இருந்து  பேரணியாக புறப்பட்டனர்.
 படங்கள்:  க.ஸ்ரீபரத்
தேர்வு செய்யப்பட்ட 10 ஆயிரம் கேங்மேன் பணியாளர்களுக்கு உடனடியாக பணி ஆணையை வழங்க வலியுறுத்தி... இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழுவினர்.. சென்னை - ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். படங்கள்: க.ஸ்ரீபரத்
நிரந்தர பணியில் இருக்கும் செவிலியர்களுக்கு இணையாக வேலை செய்யும் எம்,ஆர்.பி செவிலியர்களுக்கு... நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கும் ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் இன்று (29.1.2021) சென்னை சேப்பாக்கத்தில் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம்... நடைபெற்றது 
படம்:  க.ஸ்ரீபரத்
நிரந்தர பணியில் இருக்கும் செவிலியர்களுக்கு இணையாக வேலை செய்யும் எம்,ஆர்.பி செவிலியர்களுக்கு... நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கும் ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் இன்று (29.1.2021) சென்னை சேப்பாக்கத்தில் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டம்... நடைபெற்றது படம்: க.ஸ்ரீபரத்
அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில்... சென்னை பல்லவன் இல்லம் முன்பு  2016-ம் ஆண்டுமுதல் பஞ்சப்படி வழங்காமல் இருப்பதை கண்டித்து  இன்று (29.1.2021) ஆர்பாட்டம்  நடைபெற்றது.
 படங்கள்:  க.ஸ்ரீபரத்
அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில்... சென்னை பல்லவன் இல்லம் முன்பு 2016-ம் ஆண்டுமுதல் பஞ்சப்படி வழங்காமல் இருப்பதை கண்டித்து இன்று (29.1.2021) ஆர்பாட்டம் நடைபெற்றது. படங்கள்: க.ஸ்ரீபரத்
சென்னை - டிபிஐ வளாகத்தில் பணி நிரத்தரம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... தமிழ்நாடு ஓருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத் திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தினர்... இன்று (29.1.2021) தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 படம்:  க.ஸ்ரீபரத்
சென்னை - டிபிஐ வளாகத்தில் பணி நிரத்தரம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி... தமிழ்நாடு ஓருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத் திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தினர்... இன்று (29.1.2021) தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: க.ஸ்ரீபரத்
அனகாபுத்தூர் பகுதியில் நேற்று முன் தினம் இரவு 21 குடிசைகள் எரிந்து நாசமாயின. உயிரிழப்பு ஏதுமில்லை என்று சொல்லப்படுகிறது. தீ விபத்துக்குள்ளான வீட்டில் வசித்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
அனகாபுத்தூர் பகுதியில் நேற்று முன் தினம் இரவு 21 குடிசைகள் எரிந்து நாசமாயின. உயிரிழப்பு ஏதுமில்லை என்று சொல்லப்படுகிறது. தீ விபத்துக்குள்ளான வீட்டில் வசித்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in