பேசும் படங்கள்... (22.01.2021)

பேசும் படங்கள்... (22.01.2021)
Published on
சென்னை - மெரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டு வரும்  முன்னாள்  முதல்வர்  ஜெயலலிதாவின் நினைவிடப் பணிகளை  முதல்வர் பழனிசாமி,  துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்  அமைச்சர்கள்  இன்று (22.1.2021)  பார்வையிட்டனர்.
படங்கள்:  ம.பிரபு
சென்னை - மெரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடப் பணிகளை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று (22.1.2021) பார்வையிட்டனர். படங்கள்: ம.பிரபு
சென்னை ராயப்பேட்டை - லாயிட்ஸ்  சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  இன்று (22.1.2021) அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இதில் - அதிமுக  அவைத் தலைவர் மதுசூதனன்,  ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் கலந்து கொண்டனர், 
 படங்கள்: ம.பிரபு
சென்னை ராயப்பேட்டை - லாயிட்ஸ் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (22.1.2021) அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் - அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள் கலந்து கொண்டனர், படங்கள்: ம.பிரபு
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு... மதுரை -  கோரிப்பாளையத்தில் போக்குவரத்து  காவலர்கள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து... பொதுமக்களிடையே விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
 படங்கள்:  எஸ்.கிருஷ்ணமூர்த்தி
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு... மதுரை - கோரிப்பாளையத்தில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் இணைந்து... பொதுமக்களிடையே விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
சென்னை செல்லும் தேஜாஸ்  ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில்  நின்று செல்ல  வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து...  திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகச் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்ட   நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி  இன்று (22.1.2021) ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளித்தார்.
 படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
சென்னை செல்லும் தேஜாஸ் ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து... திண்டுக்கல் மாவட்ட தொழில் வர்த்தகச் சங்கம் சார்பாக திண்டுக்கல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இன்று (22.1.2021) ரயில்வே கோட்ட மேலாளரிடம் மனு அளித்தார். படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை - பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூவின் வரத்து குறைவானதால்... இன்று (22.1.2021) மல்லிகைப் பூவின் விலை ரூ,1,800 ஆக உயர்ந்துள்ளது. 
படம்;  எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை - பூ மார்க்கெட்டில் மல்லிகைப் பூவின் வரத்து குறைவானதால்... இன்று (22.1.2021) மல்லிகைப் பூவின் விலை ரூ,1,800 ஆக உயர்ந்துள்ளது. படம்; எஸ்.கிருஷ்ணமூர்த்தி
புதுச்சேரி இந்திரா காந்தி சிலையருகே... புதுச்சேரி -  காங்கிரஸ் அரசை கண்டித்து அம்மாநில பாஜகவினர் காங்கிரஸ் அரசின் செயல்படாத  திட்ட நகலை  எரித்து இன்று (22/1/2021)  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் புதுச்சேரி  காவல் துறையினர் ஈடுபட்டனர். 
படங்கள்:  எம்.சாம்ராஜ்
புதுச்சேரி இந்திரா காந்தி சிலையருகே... புதுச்சேரி - காங்கிரஸ் அரசை கண்டித்து அம்மாநில பாஜகவினர் காங்கிரஸ் அரசின் செயல்படாத திட்ட நகலை எரித்து இன்று (22/1/2021) போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் பணியில் புதுச்சேரி காவல் துறையினர் ஈடுபட்டனர். படங்கள்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி இந்திரா காந்தி சிலையருகே... புதுச்சேரி -  காங்கிரஸ் அரசை கண்டித்து அம்மாநில பாஜகவினர் காங்கிரஸ் அரசின் செயல்படாத  திட்ட நகலை  எரித்து இன்று (22/1/2021)  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் - கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
படங்கள்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி இந்திரா காந்தி சிலையருகே... புதுச்சேரி - காங்கிரஸ் அரசை கண்டித்து அம்மாநில பாஜகவினர் காங்கிரஸ் அரசின் செயல்படாத திட்ட நகலை எரித்து இன்று (22/1/2021) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் - கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. படங்கள்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி இந்திரா காந்தி சிலையருகே... புதுச்சேரி -  காங்கிரஸ் அரசை கண்டித்து அம்மாநில பாஜகவினர் காங்கிரஸ் அரசின் செயல்படாத  திட்ட நகலை  எரித்து இன்று (22/1/2021)  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் - கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அதில்  சிக்கிய நோயாளியை அழைத்துக் கொண்டு அவசர சிகிச்சைக்குச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம்.

படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி இந்திரா காந்தி சிலையருகே... புதுச்சேரி - காங்கிரஸ் அரசை கண்டித்து அம்மாநில பாஜகவினர் காங்கிரஸ் அரசின் செயல்படாத திட்ட நகலை எரித்து இன்று (22/1/2021) போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் - கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, அதில் சிக்கிய நோயாளியை அழைத்துக் கொண்டு அவசர சிகிச்சைக்குச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனம். படம்: எம்.சாம்ராஜ்
சென்னை -  புறநகர் பகுதிகளான வண்டலூர் புதிய மேம்பாலப் பகுதி, ஊரப்பாக்கம்  ரயில்நிலையம்,  வண்டலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் சென்னை புறவழி சாலை பகுதிகளில்   இன்று  (22.1.2021) காலையில்  பனிமூட்டம் அதிகளவில் இருந்தது. காலை 9  மணி வரை நீடித்த பனிமூட்டத்தால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர்.

படங்கள்:  எம்.முத்துகணேஷ்
சென்னை - புறநகர் பகுதிகளான வண்டலூர் புதிய மேம்பாலப் பகுதி, ஊரப்பாக்கம் ரயில்நிலையம், வண்டலூர் புதிய பேருந்து நிலையம் மற்றும் சென்னை புறவழி சாலை பகுதிகளில் இன்று (22.1.2021) காலையில் பனிமூட்டம் அதிகளவில் இருந்தது. காலை 9 மணி வரை நீடித்த பனிமூட்டத்தால் வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர். படங்கள்: எம்.முத்துகணேஷ்
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  இன்று (22.1.2021) கரோனா தொற்று தடுப்பூசி போட்டுக் கொண்டார் படம்:  க.ஸ்ரீபரத்
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இன்று (22.1.2021) கரோனா தொற்று தடுப்பூசி போட்டுக் கொண்டார் படம்: க.ஸ்ரீபரத்
தீயணைப்புத் துறை சார்பில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் தீ விபத்து குறித்த அனைத்து  தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். அதன் விழிப்புணர்வுக்காக... சென்னை - தாம்பரம் மெப்ஸ் சிக்னல் அருகே தாம்பரம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்.
தீயணைப்புத் துறை சார்பில் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் தீ விபத்து குறித்த அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். அதன் விழிப்புணர்வுக்காக... சென்னை - தாம்பரம் மெப்ஸ் சிக்னல் அருகே தாம்பரம் தீயணைப்புத் துறையினர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். படங்கள்: எம்.முத்துகணேஷ்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில்  வன்னியர்களுக்கு தனி உள்  இடஒதுக்கீடு  வழங்க வலியுறுத்தி...  வன்னியர் சத்திரியர் கூட்டியக்கம் சார்பில்   சென்னை - சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இன்று (22.1.2021) உண்ணாவிரதத் போராட்டம் நடைபெற்றது.
 படம்:  க.ஸ்ரீபரத்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி உள் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி... வன்னியர் சத்திரியர் கூட்டியக்கம் சார்பில் சென்னை - சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இன்று (22.1.2021) உண்ணாவிரதத் போராட்டம் நடைபெற்றது. படம்: க.ஸ்ரீபரத்
சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கன்னிமரா நூலகம் அருகில் புதுப்பிக்கப்பட்ட 'நிரந்தர புத்தகக்காட்சி' அரங்கை இன்று (22.1.2021) திறந்து வைத்து பார்வையிடுகிறார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன். உடன் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.எச்.சண்முகம் உள்ளிட்டோர்.
 படங்கள்: ம.பிரபு.
சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கன்னிமரா நூலகம் அருகில் புதுப்பிக்கப்பட்ட 'நிரந்தர புத்தகக்காட்சி' அரங்கை இன்று (22.1.2021) திறந்து வைத்து பார்வையிடுகிறார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன். உடன் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.எச்.சண்முகம் உள்ளிட்டோர். படங்கள்: ம.பிரபு.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in