பேசும் படங்கள்... (15.06.2020)

பேசும் படங்கள்... (15.06.2020)
Published on
காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு... இன்று (15.6.2020) திருச்சியை அடுத்த முக்கொம்பு மேலணைக்கு வந்த தண்ணீரை... மலர்கள், விதைகள் தூவி வரவேற்ற விவசாயிகள். 
படங்கள்:  ஜி.ஞானவேல்முருகன்
காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு... இன்று (15.6.2020) திருச்சியை அடுத்த முக்கொம்பு மேலணைக்கு வந்த தண்ணீரை... மலர்கள், விதைகள் தூவி வரவேற்ற விவசாயிகள். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
காவிரி  டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர்  இன்று (15.6.2020)
 திருச்சியை அடுத்த முக்கொம்பு மேலணைக்கு  வந்தது.  மேலணையில் நிரம்பி வழிந்த காவிரி நீரை பார்ப்பதற்கு ஆனந்தமாக இருந்தது.
படங்கள்:  ஜி.ஞானவேல்முருகன்
காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் இன்று (15.6.2020) திருச்சியை அடுத்த முக்கொம்பு மேலணைக்கு வந்தது. மேலணையில் நிரம்பி வழிந்த காவிரி நீரை பார்ப்பதற்கு ஆனந்தமாக இருந்தது. படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக அமலில் இருக்கும்  ஊரடங்கால்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள புகைப்படத் தொழிலாளர்கள்,   தங்களுக்கு இந்த கரோனா தடைக் காலம் முடியும் வரை...  மாதம் ரூ. 2 ஆயிரம்  நிவாரண நிதி  வழங்க வேண்டும்;  அரசின் விதிமுறைகளுக்கு  உட்பட்டு கோயில் திருவிழா மற்றும் திருமண நிகழ்வுகளை நடத்த  அனுமதிக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி...   இன்று (15.6.2020)
போட்டோ வீடியோ தொழிலாளர் சங்கத்தினர்  திரண்டு வந்து திருநெல்வேலி  மாவட்ட ஆட்சியர்   அலுவலகத்தில் மனு அளித்தனர்.
 படங்கள்:   மு. லெட்சுமி அருண்
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைக்காக அமலில் இருக்கும் ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள புகைப்படத் தொழிலாளர்கள், தங்களுக்கு இந்த கரோனா தடைக் காலம் முடியும் வரை... மாதம் ரூ. 2 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்; அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கோயில் திருவிழா மற்றும் திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி... இன்று (15.6.2020) போட்டோ வீடியோ தொழிலாளர் சங்கத்தினர் திரண்டு வந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். படங்கள்: மு. லெட்சுமி அருண்
வேலூரில்  கரோனா  தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக...  பொதுமக்கள் அதிகமாகக்  கூடும் நேதாஜி காய்கறி மார்க்கெட்,  பூ மார்க்கெட் உட்பட பழக்கடைகள் அனைத்தும்  தற்காலிகமாக...  வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள  - வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்தில்  இடமாற்றம் செய்யப்பட்டு,   இன்று (ஜூன் 15) முதல் செயல்படத் தொடங்கியது.
 படங்கள்:  வி.எம்.மணிநாதன்
வேலூரில் கரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக... பொதுமக்கள் அதிகமாகக் கூடும் நேதாஜி காய்கறி மார்க்கெட், பூ மார்க்கெட் உட்பட பழக்கடைகள் அனைத்தும் தற்காலிகமாக... வேலூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள - வெங்கடேஸ்வரா பள்ளி மைதானத்தில் இடமாற்றம் செய்யப்பட்டு, இன்று (ஜூன் 15) முதல் செயல்படத் தொடங்கியது. படங்கள்: வி.எம்.மணிநாதன்
திருநெல்வேலி  ஈரடுக்கு மேம்பாலத்தின்கீழ் உள்ள வணிக வளாகங்களுக்கு ரயிலில் வரும் சரக்குகளை ஏற்ற... இறக்க.... சரக்கு வாகனங்கள் வரும்  முக்கிய சாலை  பகுதிகள் மிகவும் சேதமடைந்துள்ளன.
இந்த சாலையை சீர்செய்ய   பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும்... அரசிடமிருந்து  எந்தவித  நடவடிக்கையும்  இல்லை  என்று அப்பகுதி வணிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
 படம்:  மு. லெட்சுமி அருண்
திருநெல்வேலி ஈரடுக்கு மேம்பாலத்தின்கீழ் உள்ள வணிக வளாகங்களுக்கு ரயிலில் வரும் சரக்குகளை ஏற்ற... இறக்க.... சரக்கு வாகனங்கள் வரும் முக்கிய சாலை பகுதிகள் மிகவும் சேதமடைந்துள்ளன. இந்த சாலையை சீர்செய்ய பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும்... அரசிடமிருந்து எந்தவித நடவடிக்கையும் இல்லை என்று அப்பகுதி வணிகர்கள் வருத்தம் தெரிவித்தனர். படம்: மு. லெட்சுமி அருண்
வேலூரில்  கரோனா  தொற்றுப்  பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையொட்டி...  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வேலூர்  - கிருபானந்த வாரியார் சாலை உட்பட பல பகுதிகளில் இன்று (15.6.2020)  மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தினர்.
 படம்: வி.எம்.மணிநாதன்
வேலூரில் கரோனா தொற்றுப் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையொட்டி... முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வேலூர் - கிருபானந்த வாரியார் சாலை உட்பட பல பகுதிகளில் இன்று (15.6.2020) மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தினர். படம்: வி.எம்.மணிநாதன்
சென்னையை அ டுத்த பம்மல் பகுதியில் சங்கர் நகர் காவல் நிலையத்தில்... 4   போலீஸாருக்கு  கரொனா தோற்று உறுதி செய்யப்பட்டது.  இதையொட்டி... இன்று (15.6.2020)  அந்த  காவல்நிலையம் முழுமையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட் டது. 
படங்கள்: எம்.முத்து கணேஷ்
சென்னையை அ டுத்த பம்மல் பகுதியில் சங்கர் நகர் காவல் நிலையத்தில்... 4 போலீஸாருக்கு கரொனா தோற்று உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி... இன்று (15.6.2020) அந்த காவல்நிலையம் முழுமையாக கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட் டது. படங்கள்: எம்.முத்து கணேஷ்
வேலூர்  - சேண்பாக்கம் பகுதியில்   2 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு  இன்று (15.6.2020) உறுதிபடுத்தப்பட்டதைத்  தொடர்ந்து...  அப்பகுதி  உட்பட  அனைத்து தெருக்களிலும்  மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தினர். 
படம்:  வி.எம்.மணிநாதன்
வேலூர் - சேண்பாக்கம் பகுதியில் 2 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இன்று (15.6.2020) உறுதிபடுத்தப்பட்டதைத் தொடர்ந்து... அப்பகுதி உட்பட அனைத்து தெருக்களிலும் மாநகராட்சி ஊழியர்கள் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தப்படுத்தினர். படம்: வி.எம்.மணிநாதன்
சென்னை உட்பட வெளியூரில் இருந்து வந்தவர்களை  கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3 ஆயிரம்  பேருக்கு கரோனா பரிசோதனை செய்திட  வேண்டும்...  என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி, மதுரை நாடாளுமன்ற  உறுப்பினர்  சு.வெங்கடேசன்,  திமுக  சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி மற்றும் சரவணன் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் -  மதுரை மாவட்ட ஆட்சியர் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.                 
 படம் :  எஸ். கிருஷ்ணமூர்த்தி
சென்னை உட்பட வெளியூரில் இருந்து வந்தவர்களை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்திட வேண்டும்... என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மூர்த்தி மற்றும் சரவணன் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் - மதுரை மாவட்ட ஆட்சியர் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மல்லர் கம்ப தினத்தை முன்னிட்டு...தலைமை பயிற்சியாளர் ராமச்சந்திரன் தலைமையில் போட்டிகள் நடைபெற்றன. 
படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மல்லர் கம்ப தினத்தை முன்னிட்டு...தலைமை பயிற்சியாளர் ராமச்சந்திரன் தலைமையில் போட்டிகள் நடைபெற்றன. படம்; எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை - நேதாஜி ரோடு, திண்டுக்கல்  ரோடு, மேல மாசி  வீதிக்கு  இடையே   ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ்  நடைபெற்று வரும் பணிகளுக்காக -  மாநகராட்சி ஊழியர்கள்  பள்ளம் தோண்டியதால்...  அப்பகுதி வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல  சிரமமாக இருந்து வந்தது. இதையடுத்து - இன்று (15.6.2020) மாநகராட்சி ஊழியர்கள் தற்காலிக நடைபாதை அமைத்து கொடுத்துள்ளனர்.
 படங்கள்:  எஸ் .கிருஷ்ணமூர்த்தி
மதுரை - நேதாஜி ரோடு, திண்டுக்கல் ரோடு, மேல மாசி வீதிக்கு இடையே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளுக்காக - மாநகராட்சி ஊழியர்கள் பள்ளம் தோண்டியதால்... அப்பகுதி வழியாக பொதுமக்கள் நடந்து செல்ல சிரமமாக இருந்து வந்தது. இதையடுத்து - இன்று (15.6.2020) மாநகராட்சி ஊழியர்கள் தற்காலிக நடைபாதை அமைத்து கொடுத்துள்ளனர். படங்கள்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
மதுரை  மாநகராட்சி அலுவலக  2-வது தளத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களில்  ஒருவருக்கு இன்று (15.6.2020)  கரோனா தொற்று  உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து.. ஆணையர் உத்தரவின்பேரில்  2-வது  தளத்தில் உள்ள  ஒரு பகுதி  மூடப்பட்டது.  
படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை மாநகராட்சி அலுவலக 2-வது தளத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களில் ஒருவருக்கு இன்று (15.6.2020) கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து.. ஆணையர் உத்தரவின்பேரில் 2-வது தளத்தில் உள்ள ஒரு பகுதி மூடப்பட்டது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
வேலூர்  - சேண்பாக்கம்  பகுதியில்  நேற்று (14.6.2020)   2  பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.  மேலும் சிலருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து...  இன்று  அப்பகுதியில் -  ஈஸ்வரன் கோயில் தெரு, பஜனைக் கோயில், களத்துமேட்டுத் தெரு உட்பட பல தெருக்களில்  சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று   யாருக்காவது காய்ச்சல், சளி,  இருமல் உள்ளதா என ஆய்வு செய்தனர்.
 படம்: வி.எம்.மணிநாதன்
வேலூர் - சேண்பாக்கம் பகுதியில் நேற்று (14.6.2020) 2 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும் சிலருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து... இன்று அப்பகுதியில் - ஈஸ்வரன் கோயில் தெரு, பஜனைக் கோயில், களத்துமேட்டுத் தெரு உட்பட பல தெருக்களில் சுகாதாரத் துறையினர் வீடு வீடாகச் சென்று யாருக்காவது காய்ச்சல், சளி, இருமல் உள்ளதா என ஆய்வு செய்தனர். படம்: வி.எம்.மணிநாதன்
ஹோட்டல்   உரிமையாளர்கள்  மற்றும்  ஹோட்டல்களில்  பணிபுரிவோரின்  வாழ்வாதாரம்  பாதிப்பதால்..  ஹோட்டல்களை  மேலும்   2  மணி நேரம்    திறந்து வைப்பதற்கு  அனுமதிக் கேட்டு...  தமிழ்நாடு  அனைத்து  உணவகங்கள்  சங்கம் சார்பாக... மதுரை  - மாவட்ட  ஆட்சியரிடம்  இன்று (15.6.2020)  மனு கொடுக்க வந்தனர். 
படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஹோட்டல்களில் பணிபுரிவோரின் வாழ்வாதாரம் பாதிப்பதால்.. ஹோட்டல்களை மேலும் 2 மணி நேரம் திறந்து வைப்பதற்கு அனுமதிக் கேட்டு... தமிழ்நாடு அனைத்து உணவகங்கள் சங்கம் சார்பாக... மதுரை - மாவட்ட ஆட்சியரிடம் இன்று (15.6.2020) மனு கொடுக்க வந்தனர். படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
வேலூரில்  - கரோனா  தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டி....   வேலூர் -  அண்ணா சாலையில் உள்ள சாரதி மாளிகை வணிக வளாகத்தில்  உள்ள  அனைத்து கடைகளும்  2-வது நாளாக  இன்று (ஜூன் - 15) மூடப்பட்டுள்ளது.
 படங்கள்: வி.எம்.மணிநாதன்
வேலூரில் - கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையொட்டி.... வேலூர் - அண்ணா சாலையில் உள்ள சாரதி மாளிகை வணிக வளாகத்தில் உள்ள அனைத்து கடைகளும் 2-வது நாளாக இன்று (ஜூன் - 15) மூடப்பட்டுள்ளது. படங்கள்: வி.எம்.மணிநாதன்
கோவை சுங்கம் பகுதியில் உள்ள  அரசுப்  போக்குவரத்து  கழகப் பணிமனையின்  முன்பு... இன்று (15.6.2020)  ’கரோனா  பேரிடர்  காலங்களில் -  லாபத்தை எதிர்பார்த்து வசூலை அதிகரிக்க சொல்லாதே’ என்று
போக்குவரத்து  அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்கள்
கோஷம் போட்டு...   ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
படம்:   ஜெ .மனோகரன்  .
கோவை சுங்கம் பகுதியில் உள்ள அரசுப் போக்குவரத்து கழகப் பணிமனையின் முன்பு... இன்று (15.6.2020) ’கரோனா பேரிடர் காலங்களில் - லாபத்தை எதிர்பார்த்து வசூலை அதிகரிக்க சொல்லாதே’ என்று போக்குவரத்து அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்கள் கோஷம் போட்டு... ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஜெ .மனோகரன் .
மின் கட்டண சலுகை குறித்து தெளிவான அறிக்கை கிடைக்கும் வரை...  தொழில் நிறுவனங்களின் மின் துண்டிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு...  இன்று (15.6.2020)  கோவை ஆட்சியரிடம்  மனு அளிக்கவந்த தொழில் அமைப்புகள்.  படம்: ஜெ .மனோகரன்
மின் கட்டண சலுகை குறித்து தெளிவான அறிக்கை கிடைக்கும் வரை... தொழில் நிறுவனங்களின் மின் துண்டிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு... இன்று (15.6.2020) கோவை ஆட்சியரிடம் மனு அளிக்கவந்த தொழில் அமைப்புகள். படம்: ஜெ .மனோகரன்
வழிபாட்டுக்காக  கோயில் நடையைத்  திறக்க வேண்டி...  கோவை கோணியம்மன் கோயிலில்  சக்தி சேனா அமைப்பினர்  இன்று (15.6.2020)           விளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
படம்:   ஜெ.மனோகரன்
வழிபாட்டுக்காக கோயில் நடையைத் திறக்க வேண்டி... கோவை கோணியம்மன் கோயிலில் சக்தி சேனா அமைப்பினர் இன்று (15.6.2020) விளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஜெ.மனோகரன்
கரோனா  பேரிடர்  காலங்களில் மைக்ரோ நிறுவனங்கள் நெருக்கடி கொடுப்பதாகவும்...   தொழில்முனைவோர் வாங்கிய கடனுக்கான வட்டி வசூலிப்பதை  நிறுத்தி வைக்கக் கோரியும்...   இன்று (15.6.2020) மாதர் சங்கத்தினர்  கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு  மனு அளிக்க வந்தனர்.
 படம்:  ஜெ .மனோகரன்
கரோனா பேரிடர் காலங்களில் மைக்ரோ நிறுவனங்கள் நெருக்கடி கொடுப்பதாகவும்... தொழில்முனைவோர் வாங்கிய கடனுக்கான வட்டி வசூலிப்பதை நிறுத்தி வைக்கக் கோரியும்... இன்று (15.6.2020) மாதர் சங்கத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தனர். படம்: ஜெ .மனோகரன்
கோவையில்  உள்ள நீர் நிலைகளைத்  தூர்வார வேண்டும்...  ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்... நோய்யல் நதியில் வரும்  தண்ணீரை  அனைத்து குளங்களிலும் நிரப்ப  உரிய தடுப்பணைகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி -    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று (15.6.2020) கோவை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.   
படம் ; ஜெ .மனோகரன்
கோவையில் உள்ள நீர் நிலைகளைத் தூர்வார வேண்டும்... ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்... நோய்யல் நதியில் வரும் தண்ணீரை அனைத்து குளங்களிலும் நிரப்ப உரிய தடுப்பணைகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி - தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று (15.6.2020) கோவை ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர். படம் ; ஜெ .மனோகரன்
தமிழகத்தில் கரோனா தொற்றுப்  பரவல்...  தற்போது  உச்சத்தை எட்டியுள்ளதையொட்டி...  இன்று (15.6.2020) மருத்துவ நிபுணர்கள் குழு
  முதல்வரை சந்தித்த பிறகு... பத்திரிகையாளர்களை சந்தித்தனர். 
 படங்கள்:  ம.பிரபு
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல்... தற்போது உச்சத்தை எட்டியுள்ளதையொட்டி... இன்று (15.6.2020) மருத்துவ நிபுணர்கள் குழு முதல்வரை சந்தித்த பிறகு... பத்திரிகையாளர்களை சந்தித்தனர். படங்கள்: ம.பிரபு
தலைமைச் செயகலத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில்... இன்று (15.6.2020)  அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு...  வெளியே வரும் முதல்வர் பழனிசாமியை வழியனுப்பி வைக்கும் அக்கட்சினர்.
 படம்:  ம.பிரபு
தலைமைச் செயகலத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில்... இன்று (15.6.2020) அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு... வெளியே வரும் முதல்வர் பழனிசாமியை வழியனுப்பி வைக்கும் அக்கட்சினர். படம்: ம.பிரபு
கடற்கரையில் இருந்து  தலைமைச்  செயலகம் செல்லும்  காமராஜர்  சாலையில் உள்ள முக்கிய அடையாளமான நேம்பியர் பாலம்  இப்போது புதிய பொலிவு பெற்று வருகிறது.  
வழக்கமாக வெள்ளை வண்ணம் பூசப்படுவதால்  பாலம்  விரைவில் தனது பொலிவை இழப்பதுடன்... கடற்கரை யின்  உப்பு காற்றில் வெள்ளை நிறமும் மாறிவிடுவதால்...
 தற்போது -  புதிய ரசாயனக் கலவைக் கொண்டு பாலத்தில் புதிய கலவை பூசப்படுகிறது. 
படங்கள்: ம.பிரபு
கடற்கரையில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் காமராஜர் சாலையில் உள்ள முக்கிய அடையாளமான நேம்பியர் பாலம் இப்போது புதிய பொலிவு பெற்று வருகிறது. வழக்கமாக வெள்ளை வண்ணம் பூசப்படுவதால் பாலம் விரைவில் தனது பொலிவை இழப்பதுடன்... கடற்கரை யின் உப்பு காற்றில் வெள்ளை நிறமும் மாறிவிடுவதால்... தற்போது - புதிய ரசாயனக் கலவைக் கொண்டு பாலத்தில் புதிய கலவை பூசப்படுகிறது. படங்கள்: ம.பிரபு
சென்னையில்   இன்று (15.6.2020)  வானத்தில்  கருமேகங்கள் சூழ்ந்திருந்த  அந்திப்பொழுதில்...  போர் நினைவு சின்னம் அருகில் 
பட்டொளி வீசிப்  பறக்கும்  நமது இந்திய தேசியக் கொடி.
படம்:  ம.பிரபு
சென்னையில் இன்று (15.6.2020) வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்திருந்த அந்திப்பொழுதில்... போர் நினைவு சின்னம் அருகில் பட்டொளி வீசிப் பறக்கும் நமது இந்திய தேசியக் கொடி. படம்: ம.பிரபு

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in