மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்... இந்த கரோனா பேரிடர் காலத்தில் 24 மணி நேரமும் பணிபுரிந்து வரும் ஊழியர்கள், பரிசோதனை மைய ஊழியர்கள், நோயாளிகளின் உறவினர்கள் ஆகியோருக்கு 3 நேர உணவையும் ...தொடர்ந்து 75 நாட்களாக வழங்கி வருகின்றன சில நல்ல உள்ளங்கள்.
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.எம். அன்புநிதி , வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த இப்ராஹிம் சுல்தான் சேட், வில்லாபுரம் அரிமா சங்கத் தலைவரும் சமூக ஆர்வலருமான காதர் மைதீன், சேக் அப்துல் சட்டர், செய்யது சாஹதீன், சீனி முகமது ஆகியோர்தான் அந்த நல்ல உள்ளங்கள்.
இந்த அன்பர்களின் - சமூக சேவையை பாராட்டி... இன்று (11.6.2020) அரசு ராஜாஜி மருத்துவமனை தலைவர் சங்குமணி நன்றி தெரிவித்து, சால்வை போர்த்தி... சான்றிதழ் வழங்கி கவுரவப்படுத்தினார். உடன் - மருத்துவமனை கண்காணிப்பாளர் ஹேமந்த் குமார் மற்றும் கரோனா தலைமை மருத்துவரும் நுரையீரல் நலத் துறை தலைவர் ஆர்.பிரபாகரன் ஆகியோர் .
படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி