கரோனா தொற்றுக் காரணமாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை - குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். தகவலறிந்து வந்த - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, டி.ஆர்.பாலு, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மறைந்த அன்பழகனுக்கு அஞ்சலி செலுத்தினர். தகவலறிந்த அக்கட்சியின் தொண்டர்களும் அம்மருத்துவமனையின் முன்பு திரண்டனர்.
படங்கள்: எம்.முத்துகணேஷ்