பேசும் படங்கள்... (25.05.2020)

பேசும் படங்கள்... (25.05.2020)
Published on
ரம்ஜான் பண்டிகை நாளான இன்று ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கோவை உக்கடம் ஜே. கே. நகர் பகுதியில்  முஸ்லிம் மக்கள் அவரவர் வீட்டு மொட்டை மாடியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
 படம் : ஜெ .மனோகரன்
ரம்ஜான் பண்டிகை நாளான இன்று ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் கோவை உக்கடம் ஜே. கே. நகர் பகுதியில் முஸ்லிம் மக்கள் அவரவர் வீட்டு மொட்டை மாடியில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். படம் : ஜெ .மனோகரன்
உள்நாட்டு விமானப்  போக்குவரத்து சேவை இன்று முதல் தொடங்கிய நிலையில்... கோவை விமான நிலையத்தில் காலை விமானத்தில் வந்த பயணிகளுக்கு  கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது. 
 படம் : ஜெ .மனோகரன்
உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை இன்று முதல் தொடங்கிய நிலையில்... கோவை விமான நிலையத்தில் காலை விமானத்தில் வந்த பயணிகளுக்கு கரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டது. படம் : ஜெ .மனோகரன்
உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை இன்று முதல் தொடங்கிய நிலையில்... டெல்லியில் இருந்து   இன்று காலையில் விமானம் மூலம் கோவை வந்திறங்கிய தன் மகளை  வரவேற்க  வந்திருந்த ஒரு  தாய்...  மகளைக் கண்டதும்  ஓடி வந்து  தன் மகளின் கையில் இருந்த  பேத்தியை   அள்ளியெடுத்து   கொஞ்ச முயற்சிக்க...  மகள் வேண்டாம் என செல்லமாய் மறுத்து ஒதுங்க... அங்கே  ஒரு பாசப் போராட்டமே நடந்தது.
 படங்கள்: ஜெ .மனோகரன்
உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை இன்று முதல் தொடங்கிய நிலையில்... டெல்லியில் இருந்து இன்று காலையில் விமானம் மூலம் கோவை வந்திறங்கிய தன் மகளை வரவேற்க வந்திருந்த ஒரு தாய்... மகளைக் கண்டதும் ஓடி வந்து தன் மகளின் கையில் இருந்த பேத்தியை அள்ளியெடுத்து கொஞ்ச முயற்சிக்க... மகள் வேண்டாம் என செல்லமாய் மறுத்து ஒதுங்க... அங்கே ஒரு பாசப் போராட்டமே நடந்தது. படங்கள்: ஜெ .மனோகரன்
வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி ரோடு பகுதியில் இருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட அப்பகுதி தெருக்களில்...  பிளீச்சீங் பவுடர் தூவி, கிருமிநாசினி மருந்து தெளித்த மாநாகராட்சி தூய்மை பணியாளர்கள். 
படம்:  வி.எம்.மணிநாதன்
வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி ரோடு பகுதியில் இருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, தனிமைப்படுத்தப்பட்ட அப்பகுதி தெருக்களில்... பிளீச்சீங் பவுடர் தூவி, கிருமிநாசினி மருந்து தெளித்த மாநாகராட்சி தூய்மை பணியாளர்கள். படம்: வி.எம்.மணிநாதன்
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க  ஊரடங்கு அமலில் இருப்பதால் -   பள்ளிவாசல்கள், மைதானங்களில்  ரமலான் சிறப்புத் தொழுகை நடத்த தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து.... வேலூர் பி.டி.சி. ரோடு பகுதியில் உள்ள மசூதி, ஆர்.என்.பாளையம் பகுதியில் உள்ள ஈத்கா மைதானம் மற்றும் வேலூர் கோட்டை ஆகிய இடங்களில் காவல்துறையினர் பாதுப்புப் பணியில் ஈடுபட்டுடிருந்தனர்.
 படங்கள்:  வி.எம்.மணிநாதன்
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் இருப்பதால் - பள்ளிவாசல்கள், மைதானங்களில் ரமலான் சிறப்புத் தொழுகை நடத்த தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து.... வேலூர் பி.டி.சி. ரோடு பகுதியில் உள்ள மசூதி, ஆர்.என்.பாளையம் பகுதியில் உள்ள ஈத்கா மைதானம் மற்றும் வேலூர் கோட்டை ஆகிய இடங்களில் காவல்துறையினர் பாதுப்புப் பணியில் ஈடுபட்டுடிருந்தனர். படங்கள்: வி.எம்.மணிநாதன்
புதுவையில் மீண்டும் 'மது'ரகானம்!

புதுச்சேரியில் மதுபானக் கடைகள் 60 நாட்களுக்குப் பிறகு இன்று காலை 10 மணி முதல் திறக்கப்பட்டது .பல்வேறு
 மதுப்பிரியர்கள் கூட்டம் 

 சில கடைகளில் மட்டும்  அதிகமாகக் காணப்பட்டது .சுட்டெரிக்கும் மதிய வெயிலில்  முகக்கவசத்துடன்

 மது வாங்க நீண்ட வரிசையில்  மதுப்பிரியர்கள் காத்திருந்தனர்., மீண்டும்  புதுச்சேரியில் மதுக் கச்சேரி 

களைகட்ட ஆரம்பித்துவிட்டது. இனி அங்கே 'மது'ரகானம்தான். 

படம்: .எம்.சாம்ராஜ்
புதுவையில் மீண்டும் 'மது'ரகானம்! புதுச்சேரியில் மதுபானக் கடைகள் 60 நாட்களுக்குப் பிறகு இன்று காலை 10 மணி முதல் திறக்கப்பட்டது .பல்வேறு மதுப்பிரியர்கள் கூட்டம் சில கடைகளில் மட்டும் அதிகமாகக் காணப்பட்டது .சுட்டெரிக்கும் மதிய வெயிலில் முகக்கவசத்துடன் மது வாங்க நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் காத்திருந்தனர்., மீண்டும் புதுச்சேரியில் மதுக் கச்சேரி களைகட்ட ஆரம்பித்துவிட்டது. இனி அங்கே 'மது'ரகானம்தான். படம்: .எம்.சாம்ராஜ்
புதுச்சேரியில் மதுபானக் கடைகள் 60 நாட்களுக்குப் பிறகு இன்று காலை 10 மணி முதல் திறக்கப்பட்டது. சரியாக காலை 10 மணிகெல்லாம் மதுப்பிரியர்கள்  மது வாங்குவதகு வரிசையில்  நிற்க  தொடங்கிவிட்டனர்.    மதுக்கடை திறக்கப்பட்டவுடன் தங்கள் கைகளைத்  தட்டி  தங்களின் உற்சாகத்தை தெரிவித்தனர்.

படம்: .எம்.சாம்ராஜ்
புதுச்சேரியில் மதுபானக் கடைகள் 60 நாட்களுக்குப் பிறகு இன்று காலை 10 மணி முதல் திறக்கப்பட்டது. சரியாக காலை 10 மணிகெல்லாம் மதுப்பிரியர்கள் மது வாங்குவதகு வரிசையில் நிற்க தொடங்கிவிட்டனர். மதுக்கடை திறக்கப்பட்டவுடன் தங்கள் கைகளைத் தட்டி தங்களின் உற்சாகத்தை தெரிவித்தனர். படம்: .எம்.சாம்ராஜ்
ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்!

படம்: .எம்.சாம்ராஜ்
ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண்! படம்: .எம்.சாம்ராஜ்
ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்:

அப்பாடி பை நிறைய மது பாட்டில்களை வாங்கியாச்சு... .’ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்’ என்று கூவும்

 மனநிலையில் மகிழ்ந்து குலாவிச் செல்லும் மதுப்பிரியர்.

   படம்: .எம்.சாம்ராஜ்
ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்: அப்பாடி பை நிறைய மது பாட்டில்களை வாங்கியாச்சு... .’ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்’ என்று கூவும் மனநிலையில் மகிழ்ந்து குலாவிச் செல்லும் மதுப்பிரியர். படம்: .எம்.சாம்ராஜ்
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து  இன்று ஜார்க்கண்ட் மாநிலத்துக்குச் செல்வதற்காக காத்திருக்கும் புலம் பெயர்ந்த வட மாநிலத் தொழிலாளர்கள்.
 படம்:  எஸ் .கிருஷ்ணமூர்த்தி
மதுரை ரயில் நிலையத்தில் இருந்து இன்று ஜார்க்கண்ட் மாநிலத்துக்குச் செல்வதற்காக காத்திருக்கும் புலம் பெயர்ந்த வட மாநிலத் தொழிலாளர்கள். படம்: எஸ் .கிருஷ்ணமூர்த்தி
சுற்றுச்சூழலை பாதிக்கும் புகை மாசு:
வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே அண்ணா மேம்பாலம் பகுதி பாலாற்றில் பிளாஸ்டிக் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், இறைச்சி கழிவுகளைக் கொட்டி எரித்ததில்... அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் சூழ்ந்து   துர்நாற்றம் விசி வருகிறது. இதனால், கண் எரிச்சல் எற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியினர்.
 படங்கள்: வி.எம்.மணிநாதன்
சுற்றுச்சூழலை பாதிக்கும் புகை மாசு: வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே அண்ணா மேம்பாலம் பகுதி பாலாற்றில் பிளாஸ்டிக் பொருட்கள், வாகன உதிரிபாகங்கள், இறைச்சி கழிவுகளைக் கொட்டி எரித்ததில்... அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டம் சூழ்ந்து துர்நாற்றம் விசி வருகிறது. இதனால், கண் எரிச்சல் எற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகியினர். படங்கள்: வி.எம்.மணிநாதன்
144 தடை உத்தரவு காரணமாக மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின்  கட்டுமானப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருகின்றன.
 படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
144 தடை உத்தரவு காரணமாக மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் மெதுவாக நடைபெற்று வருகின்றன. படம் : எஸ். கிருஷ்ணமூர்த்தி
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் ரம்ஜான்  பண்டிகையான இன்று இஸ்லாமியர்கள் அவர்களது வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனர்.  சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில்  வீட்டின் மாடியில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.
படங்கள்: எஸ்.குருபிரசாத்
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் ரம்ஜான் பண்டிகையான இன்று இஸ்லாமியர்கள் அவர்களது வீடுகளிலேயே தொழுகையில் ஈடுபட்டனர். சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் வீட்டின் மாடியில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள். படங்கள்: எஸ்.குருபிரசாத்
ரம்ஜான் வாழ்த்து:
தங்களின் வீட்டில் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி, கைகளைக் குலுக்கி... ரம்ஜான் தின வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட சிறுவர், சிறுமியர்கள்.
 இடம். வேலூர் ஆர்.என்.பாளையம்.
 படங்கள்: வி.எம்.மணிநாதன்
ரம்ஜான் வாழ்த்து: தங்களின் வீட்டில் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி, கைகளைக் குலுக்கி... ரம்ஜான் தின வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்ட சிறுவர், சிறுமியர்கள். இடம். வேலூர் ஆர்.என்.பாளையம். படங்கள்: வி.எம்.மணிநாதன்
ரம்ஜான் பண்டிகைக்கு மசூதியில் ஓன்ற கூடி தொழுகை நடத்த... மத்திய  - மாநில அரசுகள்   அனுமதி மறுத்ததையடுத்து...  புதுச்சேரி சுல்தான்பேட்டையில் தங்களது வீட்டில் தொழுகையில் ஈடுபட்ட  இஸ்ளாமியர்கள். மேலும் அவர்கள் -  தங்களுக்குள்... ரம்ஜான் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
   படங்கள்.எம்.சாம்ராஜ்
ரம்ஜான் பண்டிகைக்கு மசூதியில் ஓன்ற கூடி தொழுகை நடத்த... மத்திய - மாநில அரசுகள் அனுமதி மறுத்ததையடுத்து... புதுச்சேரி சுல்தான்பேட்டையில் தங்களது வீட்டில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்ளாமியர்கள். மேலும் அவர்கள் - தங்களுக்குள்... ரம்ஜான் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். படங்கள்.எம்.சாம்ராஜ்
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால்...   இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டிலேயே ரம்ஜான் பண்டிகைக்கான தொழுகையை மேற்கொண்டனர்.   மதுரை  - ஆலங்குளம் பகுதியில் வீட்டு மொட்டை மாடியில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்.
 படம்:  எஸ். கிருஷ்ணமூர்த்தி
நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால்... இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டிலேயே ரம்ஜான் பண்டிகைக்கான தொழுகையை மேற்கொண்டனர். மதுரை - ஆலங்குளம் பகுதியில் வீட்டு மொட்டை மாடியில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
144 தடை உத்தரவு காரணமாக மதுரையில் உள்ள சேவா பாரதி மற்றும் சேவா கேந்திரம்  அமைப்பு சார்பில்...  சுமார் 7,460 குடும்பங்களுக்கு அரிசி,  பருப்பு மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை  இன்று காலையில் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
 படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
144 தடை உத்தரவு காரணமாக மதுரையில் உள்ள சேவா பாரதி மற்றும் சேவா கேந்திரம் அமைப்பு சார்பில்... சுமார் 7,460 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை இன்று காலையில் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளுக்கு வழங்கினார். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுபானங்களை  விற்பனை செய்வதில்... காங்கிரஸ் -திமுக கூட்டணிக் கட்சிகள் இரட்டை வேடம் போடுவதாக கூறி...  புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ  வையாபுரி மணிகண்டன் கருப்பு நிற பலுன்களைப் பறக்கவிட்டு... தனது எதிர்ப்பை தெரிவித்தார். 
 படம்: எம்.சாம்ராஜ்
மதுபானங்களை விற்பனை செய்வதில்... காங்கிரஸ் -திமுக கூட்டணிக் கட்சிகள் இரட்டை வேடம் போடுவதாக கூறி... புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி அதிமுக எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் கருப்பு நிற பலுன்களைப் பறக்கவிட்டு... தனது எதிர்ப்பை தெரிவித்தார். படம்: எம்.சாம்ராஜ்
60  நாள் ஊரடங்குக்குப் பின்பு...  நேற்றுமுதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து செயல்பட ஆரம்பித்துள்ளது. மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு...   சமூக இடைவெளியுடன்  விமானத்துக்குள் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.   சென்னை விமான நிலையத்தில்  உள்நாட்டு விமான நிலையப் பகுதியில்  விமானம் புறப்பாட்டுக்கு முன்பாக -  வரிசையில் நிற்கும் பயணிகள் மற்றும் சோதனை அதிகாரிகள்.
படங்கள்:  எம்.முத்து கணேஷ்
60 நாள் ஊரடங்குக்குப் பின்பு... நேற்றுமுதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து செயல்பட ஆரம்பித்துள்ளது. மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு... சமூக இடைவெளியுடன் விமானத்துக்குள் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான நிலையப் பகுதியில் விமானம் புறப்பாட்டுக்கு முன்பாக - வரிசையில் நிற்கும் பயணிகள் மற்றும் சோதனை அதிகாரிகள். படங்கள்: எம்.முத்து கணேஷ்
60 நாட்களுக்குப் பிறகு  உள்நாட்டு விமானப் போக்குவரத்து இன்றுமுதல்  செயல்பட்டதால்...  டெல்லி, மதுரை போன்ற ஊர்களில் இருந்து உள்நாட்டு விமானங்கள் சென்னை வந்து சேர்ந்தன. அதில் இருந்து வந்த பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு...  வாகனங்களில்  அனுப்பி வைக்கப்பட்டு... அவரவர் இல்லத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். 
படங்கள்:  எம். முத்து கணேஷ்
60 நாட்களுக்குப் பிறகு உள்நாட்டு விமானப் போக்குவரத்து இன்றுமுதல் செயல்பட்டதால்... டெல்லி, மதுரை போன்ற ஊர்களில் இருந்து உள்நாட்டு விமானங்கள் சென்னை வந்து சேர்ந்தன. அதில் இருந்து வந்த பயணிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு... வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டு... அவரவர் இல்லத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டனர். படங்கள்: எம். முத்து கணேஷ்
60 நாட்களுக்குப் பிறகு  உள்நாட்டு விமானப் போக்குவரத்து இன்றுமுதல்  செயல்பட்டதால்...  இன்று - ஹரியானாவில் இருந்து டெல்லி வந்து பின் சென்னைக்கு  5 மாதக் குழந்தையுடன் வந்த தம்பதியர்.
படம்: எம்.முத்துகணேஷ்
60 நாட்களுக்குப் பிறகு உள்நாட்டு விமானப் போக்குவரத்து இன்றுமுதல் செயல்பட்டதால்... இன்று - ஹரியானாவில் இருந்து டெல்லி வந்து பின் சென்னைக்கு 5 மாதக் குழந்தையுடன் வந்த தம்பதியர். படம்: எம்.முத்துகணேஷ்
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த சில தினங்களாக... இயங்காமல் இருந்த கிண்டி தொழிற்பேட்டை... தற்போது  குறைந்த ஊழியர்களுடன் இயங்கத்  தொடங்கியுள்ளது.
 படம்:  க.ஸ்ரீ பரத்
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த சில தினங்களாக... இயங்காமல் இருந்த கிண்டி தொழிற்பேட்டை... தற்போது குறைந்த ஊழியர்களுடன் இயங்கத் தொடங்கியுள்ளது. படம்: க.ஸ்ரீ பரத்
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் புனித ரம்ஜான் தினமான இன்று இஸ்லாமியர்கள்   தங்கள் வீடுகளிலும்,  வீட்டு மொட்டை மாடிகளிலும் சிறு அளவிலாக ஒன்றுசேர்ந்து  ரம்ஜான் தொழுகையை நடத்தினர்.
படங்கள் : மு. லெட்சுமி அருண்
திருநெல்வேலி மேலப்பாளையத்தில் புனித ரம்ஜான் தினமான இன்று இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலும், வீட்டு மொட்டை மாடிகளிலும் சிறு அளவிலாக ஒன்றுசேர்ந்து ரம்ஜான் தொழுகையை நடத்தினர். படங்கள் : மு. லெட்சுமி அருண்
சென்னையைத்  தவிர்த்து செங்கல்பட்டு,  காஞ்சிபுரம் மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் -  சென்னைக்கு அருகிலேயே  உள்ள சில மதுக்கடைகளும் நேற்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளன. வண்டலூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக்  மதுக்கடையில்  சமூக இடைவெளியை கடைபிடிக்க குடை பிடித்தவாறு.... அணிவகுத்த மதுப்பிரியர்கள். 
 படங்கள்:எம்.முத்து கணேஷ்
சென்னையைத் தவிர்த்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் - சென்னைக்கு அருகிலேயே உள்ள சில மதுக்கடைகளும் நேற்று முதல் இயங்கத் தொடங்கியுள்ளன. வண்டலூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க குடை பிடித்தவாறு.... அணிவகுத்த மதுப்பிரியர்கள். படங்கள்:எம்.முத்து கணேஷ்
இரண்டு படங்களையும் பாருங்கள்:

நீங்கள் பார்க்கும்  முதல் படம் -  முழு ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் மதுக்கடைகளைத்  திறக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால்... ஈ - காக்கைக் கூட இல்லாமல் வெறிச்சோடிய  வண்டலூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக்  மதுக்கடை.
இரண்டு படங்களையும் பாருங்கள்: நீங்கள் பார்க்கும் முதல் படம் - முழு ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் மதுக்கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால்... ஈ - காக்கைக் கூட இல்லாமல் வெறிச்சோடிய வண்டலூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கடை.
இரண்டாவது படம்:   ஊரடங்கு அமலில் இருந்தாலும்  மதுக்கடைகள் இயங்கலாம் என அரசு  அறிவித்த பின்னர்...   வண்டலூர் பகுதியில் உள்ள அதே டாஸ்மாக்  மதுக்கடையில் மது வாங்க காத்திருந்த  மதுப்பிரியர்கள்.
 படங்கள்:எம்.முத்து கணேஷ்
இரண்டாவது படம்: ஊரடங்கு அமலில் இருந்தாலும் மதுக்கடைகள் இயங்கலாம் என அரசு அறிவித்த பின்னர்... வண்டலூர் பகுதியில் உள்ள அதே டாஸ்மாக் மதுக்கடையில் மது வாங்க காத்திருந்த மதுப்பிரியர்கள். படங்கள்:எம்.முத்து கணேஷ்
புனித ரம்ஜான் தினமான இன்று உலகம் எங்கும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் - 
சமூக இடைவெளியுடன் திருவல்லிக்கேணி பகுதியில் ரம்ஜான் தொழுகை செய்யும்  பெண்கள்.
படம்: க.ஸ்ரீபர்த்
புனித ரம்ஜான் தினமான இன்று உலகம் எங்கும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையைக் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் - சமூக இடைவெளியுடன் திருவல்லிக்கேணி பகுதியில் ரம்ஜான் தொழுகை செய்யும் பெண்கள். படம்: க.ஸ்ரீபர்த்
புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு - சமூக இடைவெளியுடன் சென்னை மண்ணடிப் பகுதியில்  தங்கள்  வீடுகளின் மொட்டை மாடிகளில்... ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்ட  இஸ்லாமிய சகோதர - சகோதரிகள்.
படங்கள்:  க.ஸ்ரீபரத்
புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு - சமூக இடைவெளியுடன் சென்னை மண்ணடிப் பகுதியில் தங்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில்... ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமிய சகோதர - சகோதரிகள். படங்கள்: க.ஸ்ரீபரத்
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு  சென்னை மாநகரத்தில் -  கடந்த  2  மாதங்களுக்கும் மேலாக ஆட்டோக்களை இயக்க முடியாத நிலையில்... தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி...  தண்டையார்பேட்டை மணிக்கூண்டு  அருகில் ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ  ஓட்டுநர்கள் குடும்பத்துடன் பிச்சை எடுக்கும் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள்: க.ஸ்ரீபரத்
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை முன்னிட்டு சென்னை மாநகரத்தில் - கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஆட்டோக்களை இயக்க முடியாத நிலையில்... தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி... தண்டையார்பேட்டை மணிக்கூண்டு அருகில் ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் குடும்பத்துடன் பிச்சை எடுக்கும் பேராட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள்: க.ஸ்ரீபரத்
உழைக்கும் கரங்கள் ஓய்வதில்லை:
கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அமலில் இருந்த ஊரடங்கு காலத்தில்...  எத்தனையோ தொழில்கள் முடங்கின. இதனால் பல தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். அதில் ஒன்றுதான் -  மூங்கில் கூடைத்  தயாரிப்புத் தொழில்.
‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்... கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’ என்கிற முதுமொழிக்கு உயிர் கொடுப்பதுபோல்... மூங்கில் கூடைத் தயாரித்த  தொழிலாளர்கள்... இந்த ஊரடங்கு நாட்களில் வெளியே சொல்ல இயலாத வேதனைகளை சந்தித்துவிட்டனர்.
 இவற்றையெல்லாம் கடந்து...   60 நாட்களுக்குப் பிறகு   இப்போது  காட்பாடி சாலையோரம் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க... மீண்டும் மூங்கில் கூடைகளைப் பின்னத் தொடங்கியுள்ளார் ஒரு பெண்.
  படங்கள்:  வி.எம்.மணிநாதன்
உழைக்கும் கரங்கள் ஓய்வதில்லை: கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அமலில் இருந்த ஊரடங்கு காலத்தில்... எத்தனையோ தொழில்கள் முடங்கின. இதனால் பல தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். அதில் ஒன்றுதான் - மூங்கில் கூடைத் தயாரிப்புத் தொழில். ‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்... கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’ என்கிற முதுமொழிக்கு உயிர் கொடுப்பதுபோல்... மூங்கில் கூடைத் தயாரித்த தொழிலாளர்கள்... இந்த ஊரடங்கு நாட்களில் வெளியே சொல்ல இயலாத வேதனைகளை சந்தித்துவிட்டனர். இவற்றையெல்லாம் கடந்து... 60 நாட்களுக்குப் பிறகு இப்போது காட்பாடி சாலையோரம் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க... மீண்டும் மூங்கில் கூடைகளைப் பின்னத் தொடங்கியுள்ளார் ஒரு பெண். படங்கள்: வி.எம்.மணிநாதன்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in