ஊரடங்கால் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு - பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால்... மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.20 குறைக்க வேண்டும், சுங்கச்சாவடி கட்டண வசூலை 6 மாதங்களுக்கு நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த... வேலூர் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணி, விஜய் கோவிந்தராஜ் ஆகியோர் செய்தியாளர்களை இன்று சந்தித்தனர். இச்சந்திப்பின்போது அவர்கள் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு சிறப்பாக கையாண்டு வருவதாகக் கூறி பாராட்டும் தெரிவித்தனர்,
படம்: வி.எம்.மணிநாதன்