காற்றில் பறக்கிறதா கட்டுப்பாடுகள்?:
சேலத்தில் அரசு உத்தரவின்படி பல இடங்களில் அத்தியாவசியக் கடைகள் சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும் பொதுமக்கள் அதிகளவில் கூடும் காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் , மளிகைக் கடைகள் போன்றவற்றில் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்நிலையில் - சேலம் சூரமங்கலம் பகுதியில் சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல் விற்பனையில் ஈடுபட்ட ஒரு காய்கறிகடைக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
படம்: எஸ்.குருபிரசாத்