பிச்சைக்காரர் வழங்கிய ரூ.10 ஆயிரம் நிதியுதவி:
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் பூல் பாண்டியன். இவர், ஒரு பிச்சைக்காரர். இன்று அவர் - மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கரோனா நிவாரண நிதியாக ரூபாய் 10 ஆயிரத்தை நேரில் சென்று வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ’’கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக மதுரை வந்து, நடைபாதைகளில் சாலையோரங்களில் தங்கியிருந்த என்னை... தன்னார்வலர்கள் சிலர் மீட்டு மதுரை மாநகராட்சி ஆதரவோடு தங்க வெச்சிருத்தாங்க. இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்காக என்னால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்று நினைச்சேன். மதுரை மாட்டுத்தாவணி சந்தை, பழ சந்தை, பூ மார்க்கெட்டு போன்ற இடங்களில் பிச்சை எடுத்து 10 ஆயிரம் ரூபாய் சேர்த்தேன். அந்தத் தொகையைத்தான் மதுரை கலெக்டரிடம் கொடுத்திருக்கிறேன்’’ என்றார்.
மேலும் அவர் கூறும்போது, ’’கடந்த 40 ஆண்டுகளாக நான் பிச்சை எடுத்த காசில் ஏகப்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு நாற்காலி மேசை போன்றவை வாங்கித் தந்துள்ளேன். தற்போது கரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்படுவதை பார்த்து என்னால் இயன்ற உதவியை வழங்கினேன்’’ என்றார்.
தகவல் மற்றும் படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி