கோடை வெயில் முதல் திண்டுக்கல் பூக்கள் வரை - நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூன் 1, 2024

Tamilnadu photo story
Tamilnadu photo story
Published on
திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என மூங்கில் கூடையை தலைக்கு குலு குலு குடையாக மாற்றி அணிந்து செல்லும் வாகன ஓட்டி. | இடம்: திண்டுக்கல் கன்னிவாடி | படங்கள்: நா. தங்கரத்தினம்.

மதுரை மேலமடை பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் உள்ள கட்டிடங்களை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. |  படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

இன படுகொலையை உடனே நிறுத்துக்கோரி இஸ்ரேல் அரசை கண்டித்து டிஒய்எப்ஐ சார்பில் மதுரையில்  மனித சங்கிலி போராட்டம். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்தார். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை  கள்ளந்திரி கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் கிராம மக்கள் ஏராளமான மீன்களை பிடித்து சென்றார்கள். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

திண்டுக்கல் கரிசல்பட்டி பகுதியில் பூத்து குலுங்கும் சம்பங்கி பூக்கள். | படங்கள்: நா. தங்கரத்தினம்.

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், பள்ளிகுழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துச்செல்லும் வாகனங்களை போக்குவரத்துறை இயக்குநர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். | படங்கள்: எம்.சாம்ராஜ்

மாற்றுப் பாலினத்தவர், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கான சுயமரியாதை மாதம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சகோதரன் அமைப்பு சார்பில், சென்னை அமைந்தைகரையில் நடந்த நிகழ்ச்சியில், தங்களுக்கான கொடியை ஏற்றி ஒருவக்கொருவர் இனிப்பு வழங்கி சுயமரியாதை மாதத்தை உற்சாகமாய் கொண்டாடிய மாற்று பாலினத்தவர்கள். | படங்கள்: எஸ்.சத்தியசீலன்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in