சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய கோரி கோவை மத்திய மாவட்ட SDPI கட்சியின் சார்பாக உக்கடம் வள்ளியம்மை பேக்கரி முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. | படங்கள்: ஜெ.மனோகரன்
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய பாஜக அரசை கண்டித்து மதுரையில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக மதுரை கோரிப்பாளையம் பள்ளிவாசல் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை புது மண்டபத்தில் சுமார் 2 கோடி ரூபாய் அளவில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
கோவை டாடா பாத் அருகே தமிழக அரசின் உரிமைத்தொகையை கொச்சைப்படுத்தி பேசிய குஷ்புவை கண்டித்து குஷ்பு புகைப்படத்துக்கு தீவைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட திமுக மகளிரணியினர். | படங்கள்: ஜெ .மனோகரன்
புதுச்சேரி ஏடியுசி பாப்ஸ்கோ ஊழியர்கள் சங்கம் சார்பில் நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்கக்கோரி நுாறாவது நாளாக இன்று தலைகீழாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். | படங்கள்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி விசிக கட்சி சார்பில் சிறுபான்மையினருக்கு எதிரான சிஏஏ திருத்த சட்டத்தை திரும்பபெறக்கோரி நடைபெற்ற கண்டன ஆர்பாட்டம். | படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி தேசிய கல்வி கொள்கையை திணித்த மத்திய அரசை கண்டித்து புதுச்சேரி சட்டசபையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூட்டமைப்பினர். | படம்: எம்.சாம்ராஜ்
தமிழ்நாடு அரசு கல்லூரியிலேயே முதல்முறையாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதிநவீன செயற்கை காலை தயாரித்து பயனாளிகளுக்கு வழங்கிய மருத்துவமனையின் முதல்வர் ரத்தினவேலு. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி