மீட்புப் பணிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், 41 தொழிலாளர்களையும் பத்திரமாக வெளியே கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வந்தது. மீட்புப் பணிக்களத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படைகளைச் சேர்ந்த வீரர்கள் கயிறு, விளக்குகள், ஸ்ட்ரக்சர்கள் போன்ற உபகரணங்களுடன் சுரங்கத்தின் முன்னால் காத்திருந்தனர்.