கோவை கடன் உதவி நிகழ்வு முதல் ஆசிரியர்கள் போராட்டம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ அக்.3, 2023

Published on
மழை நாட்களில் வேலூர் மாநகராட்சி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ளம்போல் ஓடும் மழைநீர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிரதான கால்வாய் வழியாக சென்று பாலாற்றில் சேருகின்றன. இந்நிலையில், பிரதான கால்வாயில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்

தமிழ்நாடு மாநிலத் தொடக்க கூட்டுறவு வங்கியின் அனைத்து பணியாளர் சங்கம் சார்பாக தேர்ந்தெடுக்கப்படும் திட்டங்களை செயல்படுத்த முடியாத காரணத்தினால், கூட்டுறவு சங்கங்களின் அலுவலக சார்பில் சாவியை ஒப்படைக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை மதுரை பழங்காநத்தம் கூட்டுறவு வங்கி இணைய அலுவலகம் முன்பாக முன்பாக நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா எஸ்.மேலபட்டியில் விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் கொடிமரம் நிறுவ உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதிக்கவில்லை என்று கூறி, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

அனைத்து மத்திய தொழிற்சங்க ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டமைப்பு சார்பாக, ‘மத்திய அரசு கொண்டுவந்துள்ள கார்ப்பரேட்டுக்கு சாதகமாக கொள்கைக்கு கண்டணம்’ என்று கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

கோவை கொடிசியா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கண்டுபிடிப்புகள் மையத்தை  பார்வையிட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். | படங்கள்: ஜெ.மனோகரன்

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மூட்டை, மூட்டைகளாக  தேங்கியுள்ள குப்பைக் கழிவுகள். | படங்கள்: வி.எம்.மணிநாதன்

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற மத்திய அரசின் கீழ் வழங்கும் மாபெரும் கடன் உதவி பெறும் நிகழ்ச்சியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். | படங்கள்: ஜெ.மனோகரன்

பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் கிழக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் விருபாட்சிபுரம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. இதில், கலந்துக்கொண்டு பேசிய மாவட்ட செயலாளர் கே.எல்.இளவழகன். அருகில்  மாநில துணைத் தலைவர் என்.டி.சண்முகம், மாவட்ட துணை செயலாளர் சம்பத் உள்ளிட்ட பாமக பொறுப்பாளர்கள். | படம்: வி.எம்.மணிநாதன்

‘விலைவாசி உயர்வை கட்டுப்படுத்திட வேண்டும், பீடி தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3000 வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர். | படம்: வி.எம்.மணிநாதன்

உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தையொட்டி, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் மையத்தின் இயக்குநர்  குகன்,  எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் சி.ஓ.ஓ. சுவாதி ரோஹித், அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லஷ்மி நாராயண சுவாமி முன்னிலையில் வெளியிட்டார். இந்தியாவில் முதன் முறையாக அனிமேஷன் கார்ட்டூன் வீடியோ விழிப்புணர்வு செய்தனர். | படம்: ஜெ.மனோகரன்

மதுரை அரசு போக்குவரத்து கழகம் புறநகர் கிளையில் 11 பேருந்துகளில் வேலை நேரம் அதிகரிப்பை எதிர்த்து அரசு போக்குவரத்து கழக மதுரை தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்ற இடைக்கால உத்தரவு கடந்த 15. 09. 2023 பிறப்பித்தது. மதுரை மண்டல நிர்வாகம் நீதிமன்ற தடை உத்தரவை அமல்படுத்த காலதாமதம் செய்து வரும் நிலையில், போக்குவரத்துக் கழக நிர்வாகத்தை கண்டித்து  அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் போராட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்கள் மூவர் சிகிச்சையின்போது உயிரிழந்த விவகாரத்தில் உரிய நிபுணர்களைக் கொண்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கருப்பு பேஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள். | படங்கள்: நா.தங்கரத்தினம்

சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் (எஸ்எஸ்டிஏ) கடந்த செப்.28-ம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். | படங்கள்: ம.பிரபு, எஸ்.ஆர்.ரகுநாதன்

திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in