வேலூர் கஸ்பா பகுதி கானார் தெருவில் கான்கிரீட் சாலை சில மாதங்களுக்கு முன் போடப்பட்டது. இந்நிலையில், தெருவில் பாதிக்கும் மேற்பட்டு கான்கிரீட் சாலை போடப்பட்டு மீதமுள்ள பகுதியை போடாமல் விடப்பட்டுள்ளதால் அங்கு குண்டும், குழியுமாகவும், மழை நாட்களில் சேரும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். | படம்: வி.எம்.மணிநாதன்.