பெருங்களத்தூர் போக்குவரத்து மாற்றம் முதல் புதுச்சேரி ஆர்ப்பாட்டம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூலை 31, 2023

Published on
மணிப்பூர் வன்முறையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியினர். | படம்: வி.எம்.மணிநாதன்.

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் அடுப்பில்லா சமையல் போட்டியில் கலந்து கொண்டு அசத்திய கோவை புலியகுளம் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள். | படம்: ஜெ.மனோகரன்

மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற கோவை மாநகராட்சி  மாமன்ற கூட்டம். | படம்: ஜெ.மனோகரன்

மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், மகளிர் உரிமைத் தொகையை பாரபட்சம் இன்றி அனைவருக்கும் கொடுத்திட வேண்டும், மதுபான கடைகளை உடனே மூடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் சார்பில் அதன் நிறுவனர் ஜோதிகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.

மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவ மாணவிகள் மணிப்பூரில் நடந்து வரும் கலவரத்தை கண்டித்து பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தர்ணா போராட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோச்சடை பகுதியில் விளையாட்டு வீரர் பரிதி விக்னேஷுக்கு காலில் அடிபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்பொழுது அரசு வேலை வழங்கும் படி அவரது தாயார் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தார். |  படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை மாநகராட்சி பொன்முடியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்த மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் 7-வது ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப்-2023 போட்டிக்கான கோப்பையை  காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழக வளாகத்தில் அமைச்சர் துரைமுருகன் அறிமுகப்படுத்தி பாஸ் தி பால் ட்ராஃபியை தொடங்கி வைத்தார். | படம்: வி.எம்.மணிநாதன்.

புதுச்சேரி பெரியமார்கெட்டை இடிப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்கட்சிகளான திமுக, காங்கிரஸ், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.| இடம்.நேரு வீதி. | படம்: சாம்ராஜ்

புதுச்சேரி பெரியமார்கெட்டை இடிப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கடைகள் அனைத்து மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்ட பெரியமார்கெட். | படம்: சாம்ராஜ்.

புதுச்சேரி புத்தக பை இல்லாத தினத்தை முன்னிட்டு சாரம் அரசு தொடக்கப்பள்ளியில் பார்வையிட சென்ற துணைநிலை ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன் பள்ளி குழந்தைகளுடன் நடனமாடினார். | படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி புத்தக பை இல்லாத தினத்தை முன்னிட்டு குருசுக்குப்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் தனித்திறமையை பாராட்டும் விதமாக கோலம் வரைந்த மாணவிகளை பாராட்டிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். | படம்: சாம்ராஜ்

பெருங்களத்தூர் பேருந்து நிலைய பகுதியில் உள்ள பாலத்தில் ரவுண்டானா கட்டும் பணி மறுபுறம் துவங்கியதால் போக்குவரத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் காலை முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. | படங்கள்: எம்.முத்துகணேஷ்

தாம்பரம், இரும்புலியூர் ரயில் பாதையை ஆபத்தாக கடக்கும் மக்கள்..| படம்: ஜேம்ஸ்

சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் கூவம் ஆறு சுற்றுசூழல் சீரமைப்பு திட்டத்தின் கீழ், தீவுத் திடல் அருகே கூவம் கரையோரம் செடிகள் நடவு செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியே பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. |
படம்: எஸ்.சத்தியசீலன்.
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையின் கூவம் ஆறு சுற்றுசூழல் சீரமைப்பு திட்டத்தின் கீழ், தீவுத் திடல் அருகே கூவம் கரையோரம் செடிகள் நடவு செய்யப்பட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியே பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. | படம்: எஸ்.சத்தியசீலன்.
வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் விழா காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கினார். | படம்: வி.எம்.மணிநாதன்.

கன்னியாகுமரி மட்டி வாழைப்பழம், ஜடேரி நாமக்கட்டி, வீரவநல்லூர் செடி புட்டா சேலை ஆகிய மூன்று பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக, அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்க தலைவர் ப.சஞ்சய்காந்தி தெரிவித்தார். | படம்: சுந்தர் ராஜ்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in