ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டத்துக்கான விண்ணப்பம், டோக்கனை வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அல்லேரி மலை கிராமத்தில் வீடு வீடாக விநியோகம் செய்த நியாயவிலைக்கடை ஊழியர். | படம்: வி.எம்.மணிநாதன்.
மதுரை கோச்சடை திமுக இளைஞரணி சார்பாக வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட மகளிருக்கு வேலை வாய்ப்பு ஆணையை வழங்கிய வழக்கு தொகுதி எம்எல்ஏ தளபதி அவர்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மொஹரம் பண்டிகையையொட்டி, வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் மார்பில் அடித்தபடி, தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலம் சென்ற ஷியா பிரிவு இஸ்லாமியர்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநகராட்சி இணைந்து
புளூபேண்ட் எப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப் கார் பந்தயம் கோவை எல் அண்ட் டி பைபாஸ் சாலை அருகிலுள்ள மைதானத்தில் நடந்தது. இதில் புழுதி பறக்க சீறிப் பாய்ந்த கார்கள்.| படங்கள்: ஜெ.மனோகரன்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே மடிகை கிராமத்தில் குறுவை சாகுபடிக்காக இயந்திரம் மூலம் நடவு பணியில் ஈடுபட்டுள்ள விவசாயத் தொழிலாளி. | படம்: ஆர்.வெங்கடேஷ்
புதுச்சேரி சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக தலைமைச்செயலகம் எதிரே உள்ள கடலில் நடத்தப்பட்ட நீர் சறுக்கு விளையாட்டு போட்டியில் பங்கேற்ற வீரா்கள். | படங்கள்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி வழுதாவூர்சாலை கதிர்காமம் சாலையில் கொட்டப்பட்ட எண்ணெய் திரவத்தை வாகன ஓட்டிகள் விழுக்கி விழாமல் இருக்க தண்ணீரை பீயிச்சி அடித்து துாய்மை செய்த தீயணைப்புத் துறையினர். | படம்: எம்.சாம்ராஜ்
சென்னையில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலம். | படம்: அகிலா ஈஸ்வரன்