மதுரை தெற்கு மாசி வீதியில் பிஜிஎம் பிளாஸ்டிக் கம்பெனியில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மணிப்பூர் மாநிலத்தில் பாலியல் வன்முறை செய்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஐசிசிடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர். | படம்: வி.எம்.மணிநாதன்.
ஆடிப்பூரம் பிரம்மோற்சவம் நிறைவு நாளையொட்டி, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் அகிலாண்டேஸ்வரி அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. | படம்: வி.எம்.மணிநாதன்.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பிரகாரத்தில் உள்ள 108 லிங்கத் திருமேனிகளுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. | படம்: ஆர்.வெங்கடேஷ்
தஞ்சாவூர் பெரிய கோயிலில் நேற்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு பெரியநாயகி அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. | படம்: ஆர்.வெங்கடேஷ்
மதுரையில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு ரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலில் 3000 பேர் கலந்து கொண்ட சிறப்பு விளக்கு பூஜை நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
படம்: நா.தங்கரத்தினம்
ஆடிப்பூரத்தை முன்னிட்டு குன்றத்தூர் அருகே உள்ள மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் 1008 கலச பூஜை மற்றும் யாகம் நடந்தது. | படங்கள்:எம்.முத்துகணேஷ்
மதுரை எம்ஜிஆர் மைதானத்தில் மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் முதல் பரிசை வென்ற இந்திய வங்கி அணி. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி