மதுரை தடகள போட்டிகள் முதல் ‘வராத’ வாகன நிறுத்தம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூலை 19, 2023

Published on
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மக்கள் அதிகாரம் இயக்கத்தின் சார்பாக குஜராத் மற்றும் மணிப்பூர் நடக்கும் படுகொலை கண்டித்து மத்திய அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் மனுவை பெற்று குறைகளை கேட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன். | படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாய்தள நடைபாதை இல்லாமல் உள்ளதால் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் புகார் மனு அளிக்க வரும் போது படிகளை ஏறுவதற்கு மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். | படம்: வி.எம்.மணிநாதன்.

டெல்லியிலிருந்து கோவை விமான நிலையத்திற்கு  வந்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி பத்திரிகையாளர் சந்திப்பு. | படம்: ஜெ.மனோகரன்

மதுரை எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சென்னை மண்டல அளவிலான கே.வி.கே பள்ளிகளுக்கிடையிலான தடகள போட்டிகளில் உயரம் தாண்டுதலில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள். | படம்: நா.தங்கரத்தினம்.

மதுரை மாட்டுத்தாவணி மீன் மார்க்கெட்டில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள மீன்கள். | படம்: நா. தங்கரத்தினம்.

மதுரை பெரியார் பேருந்து நிலைய அடித்தளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் அடைத்து வைக்கப்பட்டுள்ள பல்நோக்கு வாகனம் நிறுத்தம். |  படம்: நா. தங்கரத்தினம்.

மதுரையில் கலைஞர் நூலகத்தை திறக்க தமிழக முதல்வர் வருகை தந்ததை முன்னிட்டு ஒருபுறம் மட்டும் வர்ணம் பூசி மறுபுறம் அப்படியே விடப்பட்டுள்ள மதுரை கே.கே.நகர் 80 அடி ரோட்டில் அமைந்துள்ள மைய தடுப்பு. | படம்: நா. தங்கரத்தினம்.

மதுரை மாவட்டத்தில் மாணவ மாணவிகளுக்கு கொடுப்பதற்காக தயார் நிலையில் இருக்கும் சைக்கிள்கள். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மேட்டூர் அருகே ஆடிப்பட்டத்தில் மானாவாரி நிலத்தில் கேழ்வரகு பயிர் நடவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். | படம்: சக்திவேல்

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் கோம்பைக்காட்டில் வரதமாநதி அணை என்பதற்கு பதிலாக, பொருந்தலாறு அணையின் எழில்மிகு தோற்றம் என வைக்கப்பட்டுள்ள தவறான அறிவிப்பு பலகையால் சுற்றுலா பயணிகள் குழப்பமடைந்துள்ளனர். | படம்: நல்லசிவன்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in