வேலூர் மாநகராட்சி சாயிநாதபுரம் பகுதி வி.பி.தங்கவேல் முதலி தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் சாலையில் கம்பிகள் ஆபத்தான நிலையில் வலை போல் உள்ளது. இவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் இப்பகுதியை கடந்து செல்கின்றர். இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து பணி சீக்கிரம் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கு எச்சரிக்கை தடுப்பு வைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்.