வேலூர் மழை முதல் காமராஜரின் கார் புதுப்பிப்பு வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூலை 12, 2023

Published on
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். காண்ட்ராக்ட் சுய உதவிக் குழுக்களில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |  படம்: வி.எம்.மணிநாதன்.

இந்திய தேர்தல் ஆணையம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக அறிவித்ததை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் செல்லூர் கே ராஜூ தலைமையில் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை எம்ஜிஆர் மைதானம் அருகே உள்ள துப்பாக்கி பயிற்சி மைதானத்தில் 48வது மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சிஐடியூ மற்றும் மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம் சார்பாக அரசாணை 152-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் குறைந்த விலையில் தக்காளி வாங்கும் பொதுமக்கள். | படம்: ஜெ.மனோகரன்

வேலூர் அண்ணா சாலையில் உள்ள கற்பகம் கூட்டுறவு ரேஷன் கடையில் இன்று வெளிசந்தையை விட குறைவாக ஒரு கிலோ ரூ.85-க்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது. | படம்: வி.எம்.மணிநாதன்.

மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் மற்றும் திட்ட செயல்பாடுகள் கட்டுப்பாட்டு அறை    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது . | படம்: ஜெ.மனோகரன்

வேலூரில் இன்று மாலை இரண்டு மணிநேரத்திற்கு மேலாக பெய்த மழை. இடம்: அண்ணா சாலை. | படம்: வி.எம்.மணிநாதன்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பேரிக்காய் சீசன் தொடங்கியுள்ள நிலையில் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதித்துள்ளதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். | படம்: நல்லசிவன்

மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்பங்கள் வருகிற 20-ம் தேதி முதல் அனைத்து குடும்ப அடடைதாரர்களுக்கும் ரேஷன்கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட உள்ளதாக கிருஷ்ணகிரியில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். | படம்: எஸ்.கே.ரமேஷ்

முன்னாள் முதல்வர் காமராஜர் பயன்படுத்திய கார், கிருஷ்ணகிரி மெக்கானிக் ஷெட்டில் புனரமைக்கப்பட்டது. |  படம்: எஸ்.கே.ரமேஷ்

மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சிகளில் தூய்மை பணியை  தனியார்மயமாக்குவதை கண்டித்து  தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில் மறியல் நடைபெற்றது. இதன் ஒருபகுதியாக பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. | படம்: ம.பிரபு

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in