தஞ்சை கல்லூரி மாணவர்கள் மறியல் முதல் ரூ.200-க்கு விற்கும் சின்ன வெங்காயம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூலை 11, 2023

Published on
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே விழிப்புணர்வு ஊர்தி மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்தார். இதில், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பேரணியில் கலந்துகொண்டனர். | படம்: வி.எம்.மணிநாதன்.

ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர். |  படம்: வி.எம்.மணிநாதன்.

காலை உணவு திட்டத்தை தனியாரிடம் வழங்குவதை கைவிடக்கோரி கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து பேரணியாக சென்ற தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் | படம்: ஜெ.மனோஹரன்

காட்பாடி அடுத்த 55 புத்தூர் கிராமத்தில் உள்ள முருகன் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தக் கூடாது என கூறி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் மனு அளித்த ஊர் பொதுமக்கள். |  படம்: வி.எம்.மணிநாதன்.

சிவகங்கை அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து 7ஆம் வகுப்பு மாணவன்  உயிரிழப்பு. ஆசிரியர் உட்பட 19 பேர் காயம் | படம்: ஜெகநாதன்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 50 நாட்களில் பாமகவை சேர்ந்த மூன்று நிர்வாகிகள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து அன்புமணி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் அகத்தாபட்டி இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ள  தென்னம நல்லூரில் சுமார் 400 ஆண்டு பழமையான கற்சிற்பம் கண்டறியப்பட்டது. | படம்: ஜனகநாயக செல்வம்

ஓசூரில்  வரத்து குறைவால்  ரூ.200-க்கு விற்பனை செய்யப்படும் சின்ன வெங்காயம். | படம்: கி.ஜெயகாந்தன்.

நெக்ஸ்ட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொள்ளாததால் காலியாக காட்சியளித்த நாற்காலிகள். | படம்: ஆர்.வெங்கடேஷ்

இடிந்து விழும் நிலையில் உள்ள விடுதி கட்டிடத்தை புதியதாக கட்டித்தர வலியுறுத்தி தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். | படம்: ஆர்.வெங்கடேஷ்

நடிகர் விஜய் பனையூர் அலுவலகத்தில் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in