சிங்கம்புணரியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற பழமையான சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் உள்ளது. இக்கோயிலை 200-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குல தெய்வமாக வழிபடுகின்றனர். 22 ஆண்டுகளுக்கு பின்னர், கோயில் திருப்பணிகள் முடிவடைந்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது.