தமிழக அரசின் இரண்டாண்டு சாதனை நிகழ்ச்சி காட்பாடியில் நடைபெற்றது. இதில், அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான நபர்களுக்கு பணி ஆணை வழங்கினார். அருகில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நந்தகுமார், அமுலு விஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்.