கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தையொட்டி, செவிலியர்கள் இனிப்புகள் வழங்கி உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். ஆண்டுதோறும் மே 12-ம் தேதியன்று உலக செவிலியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு கும்பகோணத்திலுள்ள தஞ்சாவூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று செவிலியர் தினவிழா நடைபெற்றது.
இதற்கு மருத்துவ நிலைய அலுவலர் உ.பிரபாகர் தலைமை வகித்தார். செவிலியர் கண்காணிப்பாளர்கள் எஸ்.ஜீவா, ஜி.கலாராணி,கே.உமாராணி மற்றும் ஏராளமான செவிலியர்கள் பங்கேற்று, கேக் வெட்டி, இனிப்புகளை வழங்கி, நோயாளிகளுக்கு பாரபட்சமின்றி மருத்துவ சேவையாற்றுவோம் என மெழுகு வர்த்தி ஏந்தி அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.