வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த வேலங்காட்டில் பிரசித்தி பெற்ற பொற்கொடியம்மன் புஷ்பரத ஏரித்திருவிழா இன்று நடந்தது. இவ்விழாவை வேலங்காடு, பனங்காடு, வல்லாண்டராமம் மற்றும் அன்னாசிபாளையம் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நடத்தினர். ஏரித்திருவிழாவில் புஷ்பரதத்தை பக்தர்கள் தோளில் சுமந்து வந்தனர். திருவிழாவில் பக்தர்கள் அலுகு குத்தி நேர்த்தி கடனை செலுத்தினர். திருவிழாவிற்க்கு அருகில் உள்ள ஊர்கள் மற்றும் ஆந்திர, கர்நாடக மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் வந்து குவிந்தனர். | படம்: வி.எம்.மணிநாதன்.