இதனைத் தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “கட்டிடத்தின் உரிமையாளர் பரத். சமீபத்தில் தான் கட்டிடத்தை வாங்கி உள்ளார். கட்டிடத்தின் மொத்த பரப்பளவு 1100 சதுர அடி. தரைத்தளம் மற்றும் மூன்று தளங்கள் கொண்டது இந்தக் கட்டிடம். இந்தக் கட்டிடம் 60 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. சென்னை மாநகராட்சி, தீயணைப்புத் துறை, காவல் துறை, தேசிய பேரிடர் மீட்பு படைகள் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 30 லாரிகள் மூலம் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுவருகிறது. இன்னும் 3 மணி நேரத்தில் கழிவுகள் முழுவதுமாக அகற்றப்படும். இடிபாடுகளில் யாரும் சிக்கி இருக்க வாய்ப்பு இல்லை.