இது குறித்து தோட்டக்கலை அலுவலர் சிவபாலன் கூறுகையில், “பிரையன்ட் பூங்காவில் சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணத்தில் பூக்கும் மூன்று வகையான பிரம்ம கமலம் செடிகள் மொத்தம் 40 உள்ளன. அவை தற்போது ஒவ்வொன்றாக பூக்கத் தொடங்கியுள்ளது. ரோஸ் கார்டனில் 10 பிரம்மகமலம் செடிகளை வளர்த்து வருகிறோம். ஆண்டுக்கு ஒரு முறை ஒரு செடியில் அதிகபட்சம் இரண்டு பூக்கள் மட்டுமே பூக்கும்” என்றார். | தகவல்: ஆ.நல்லசிவன்