
பாலமேடு ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக துள்ளிக் குதித்து பாய காத்திருக்கும் ஜல்லிக் காளை.
உலகப்புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று (ஜன.15) காலை கோலாகலமாக தொடங்கியது. இதில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பிறகே போட்டியில் விளையாட அனுமதிக்கப்படுகின்றனர்.
மருத்துவ சோதனை முடித்த மாடுபிடி வீரர்கள் தங்கள் சுற்றுக்காக காத்திருக்கின்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர் பரிசு பொருட்களுடன் வீடு திரும்புகிறார்.
வீர தமிழ் மகள் நேசத்தோடு வளர்த்த தன் ஜல்லிக் காளையை வாடிவாசலில் அவிழ்க்க தயாராக இருக்கிறார்.
வாடிவாசலுக்குள் என்ட்ரி கொடுக்க காத்திருக்கும் காளை.
ஜல்லிக்கட்டில் உயிரிழப்புகளைத் தடுக்க காளைகளின் கொம்புகளில் ரப்பர் கவச உறை பொருத்த வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது. அதன்படி கொம்பில் ரப்பர் கவச உறை பொருத்தப்பட்டுள்ள ஜல்லிக் காளை.
போட்டியில் பங்கேற்கும் காளைகளை பரிசோதனை செய்யும் கால்நடை மருத்துவர்கள்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. அதன்படி பணியில் உள்ள காவல்துறையினர்.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இன்று மாலை சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரரருக்கு பரிசுகளை வழங்க உள்ளார்.