
90-களில் தடம் பதித்த நடிகை மாளவிகா, திரையுலகில் இருந்து விலகியே இருந்தாலும் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பவர். அந்த வகையில் அவரது சமீபத்திய பகிர்வுகள் கவனம் ஈர்த்துள்ளன.
கடந்த 1999-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘உன்னைத் தேடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் மாளவிகா. அடுத்து ‘ஆனந்த பூங்காற்றே’ படத்தில் நடித்தார். ‘ரோஜா வனம்’, ‘பூப்பறிக்க வருகிறோம்’ படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.
‘வெற்றிக்கொட்டி கட்டு’ படத்தில் ‘கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு’ பாட்டின் மூலம் பட்டிதொட்டியெங்கும் கவனம் பெற்றார். அடுத்து ‘ஐயா’, ‘சந்திரமுகி’, ‘திருட்டுப் பயலே’ ஆகிய படங்களில் நடித்தார். ‘ஐயா’, ‘சந்திரமுகி’, ‘திருட்டுப் பயலே’ ஆகிய படங்களில் நடித்தார்.
மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘சித்திரம் பேசுதடி’ படத்தில் ‘வாள மீனுக்கும் விலங்கு மீனுக்கும்’ பாடலில் மஞ்சள் சேலையில் மனம் கவர்ந்தார்.
‘நான் அவன் இல்லை’ படத்துக்குப் பிறகு தொடர்ந்து சிறப்புத் தோற்றங்களில் நடித்தார். 2008-ம் ஆண்டு சுந்தர்.சியின் நடிப்பில் வெளியான ‘ஆயுத எழுத்து’ படத்தில் நடித்திருந்தார் மாளவிகா.