
மலையாள நடிகையான நிமிஷா சஜயன், தமிழில் சித்தா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மிஷன்: சாப்டர் 1 ஆகிய படங்களில் நடித்து அசத்தியவர். நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘டப்பா கார்டல்’ என்ற வெப் தொடரில் மாலா என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களை ஈர்த்தார். மலையாளத்தில் பிஸி ஷெட்யூலுக்கு இடையே சமீபத்தில் நிமிஷா இப்போது பகிர்ந்த போட்டோஷூட் படங்களும் ரசிகர்களை வெகுவாக வசீகரித்துள்ளது.