
‘கங்குபாய் காதியவாடி’ உள்ளிட்ட படங்கள் மூலம் பாலிவுட்டின் தனக்கென தனியிடத்தில் வீற்றிருக்கும் நடிகை ஆலியா பட, ராஜமவுலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். இதன் தொடர்ச்சியாக, ‘மகா நடிகை’, ‘கல்கி2898 ஏடி’ இயக்குநர் நாக் அஸ்வின் படம் மூலம் மீண்டும் தென்னிந்திய சினிமாவை குறிவைத்துள்ளார் ஆலியா. சமீபத்தில் ஆலியா வெளியிட்ட போட்டோஷூட் புகைப்படங்கள் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளன.