
மே 1-ல் வெளியாகும் சூர்யாவின் ‘ரெட்ரோ’வுக்காக ரசிகர்களுடன் பூஜா ஹெக்டேவும் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். அதில் அவருக்கு வலுவான கதாபாத்திரம். விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த ‘ரெட்ரோ’ பாணி போட்டோஷூட் படங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக வசீகரித்துள்ளார்.