
பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டவுக்கும், அவரது நீண்ட நாள் நண்பரான வசி என்பவருக்கு புதன்கிழமை திருமணம் நடைபெற்றது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 10’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிரியாங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணப் படங்களை வெளியிட்டு, ‘Life update: Going to be chasing sunsets with this one’ என்று பகிர்ந்துள்ளார்.
இருவரது நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் பிரியங்கா, வசி இருவருக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. புதுமணத் தம்பதிக்கு சக கலைத் துறையினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
‘பிக்பாஸ் சீசன் 5’-ன் போட்டியாளரான பிரியங்காவின் திருமணத்துக்கு, அந்த சீசனின் காதல் ஜோடிகளான அமீர் - பாவ்னி இருவரும் நேரில் சென்று வாழ்த்தினர்.