
‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் ‘இட்லி கடை’ படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் - தரணீஸ்வரி திருமணம் வியாழக்கிழமை சென்னை திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமசந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த திருமண நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.