
`அருவி', `வாழ்' போன்ற திரைப்படங்களில் நடித்தவர் பிரதீப் ஆண்டனி.
பிக்பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டு பிரபலமானார்.
இதில் இவருக்கு பாதியிலேயே சக போட்டியாளர்களால் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இவர் நடிகர் கவினின் சிறுவயது நண்பர் ஆவார். ‘டாடா’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தனது நீண்டநாள் காதலியான பூஜா சக்தியுடன் பிரதீப் ஆண்டனிக்கு இன்று திருமணம் குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடைபெற்றது.
இந்து முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் இவர்களது திருமணம் நடைபெற்றது.