
‘பிக் பாஸ்’ 6-வது சீசனில் ரன்னராக வந்து கவனம் பெற்றவர் விக்ரமன். இவருக்கும், உதவி இயக்குநரான ப்ரீத்தி கரிகாலனுக்கும் திங்கள்கிழமை சென்னை ஈஸிஆரில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் நடைபெற்றது.
நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்களை விக்ரமன் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விரைவில் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்வு ஒன்றும் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.