
கடந்த 2022-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டான்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் சிபி சக்ரவர்த்தி. இந்தப் படம் ரூ.100 கோடி வசூலித்தது.
இந்நிலையில், இயக்குநர் சிபி சக்ரவர்த்தி - வர்ஷினி தம்பதிகளுக்கு செப்டம்பர் 4-ம் தேதி நெருங்கி உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, பால சரவணன், இயக்குநர் அட்லீ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
முன்னதாக நடைபெற்ற பேச்சுலர் பார்ட்டியில் சிவகார்த்திகேயன், சிவாங்கி, பால சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.